உள்ளடக்கத்துக்குச் செல்

பாலியல் வசைச் சொற்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாலியல் உறுப்புக்களைக் குறிக்கும் சொற்கள் மற்றும் பாலியல் தொடர்பான சொற்கள் பலவும் பன்மொழிகளிலும் இழிசொற்களாகவும் வசைச்சொற்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன. ஆரம்பத்தில் இழிசொற்களாகக் கருதப்படாத சொற்களும் கால ஓட்டத்தில் இழிசொற்களாகப் பயன்பாட்டு மாற்றம் பெற்றமைக்கு பாலியல் தொடர்பான குற்ற உணர்ச்சியே காரணமாக இருக்கலாம்.

தமிழில் பாலியல் வசைச் சொற்கள்

[தொகு]

புண்டை: இது பெண் பிறப்புறுப்பினை குறிக்க பயன்படும் ஒரு சொல்லாகும். இச்சொல்லின் மூலச்சொல் லத்தீனமாகவோ, தமிழாகவோ, தென் ஆப்பிரிக்க மொழிகளில் ஒன்றாகவோ இருக்கலாம் என கருதப்படுகிறது. Punda [1]. சமூகத்தில் அங்கீகரிக்கப்படாத வார்த்தையாக இது இருப்பதுடன், இச்சொல்லின் பிரயோகம் அநாகரிகமானதென்ற கற்பிதம் கலாசார சூழலில் காணப்படுகிறது.

மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் மரபுவழி இலக்கியங்களில் இச்சொல் காணப்படவில்லையாயினும், தற்கால தமிழ் இலக்கியச்சூழலில் இச்சொல் பரவலாக பயன்பாட்டிலிருக்கிறது. தலித் இலக்கியங்களில் இச்சொல்லும், இதற்கு சமமான சொற்களும் பெருமளவில் இன்று பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் மரபுவழி இலக்கியங்களில் புண்டரீகம் என்ற சொல் தாமரை மலரை குறிக்க பயன்பட்டுள்ளது. பெண் பிறப்புறுப்பு தோற்றம் குவிந்து இதழ்களுடன் இருப்பதாலும், புனிதமானதாக கருதப்பட்டதாலும் (தாமரை மலர் இந்து மதத்தில் சிறப்பம்சம் பெற்றது), புண்டரீகம் என்ற சொல் மருவி புண்டை என்று வழக்கத்திற்கு வந்திருக்கலாம். விக்கிபீடியாவில் "புண்டரீகம்" இன்னமும் இடம் பெறாததால் உதாரனப் பாட்டை கீழேயே பார்க்கலாம்.

அண்டம்நீ யகண்டம்நீ யாதிமூல மானநீ
கண்டம்நீ கருத்தும்நீ காவியங்க ளானநீ
புண்டரீக மற்றுளே புணருகின்ற புண்ணியர்
கொண்டகோல மானநேர்மை கூர்மையென்ன கூர்மையே!
கண்டம் = எல்லை
புண்டரீகம் = வெண்தாமரை
கூர்மை = அறிவு
நேர்மை = நுண்மை
அண்டம், அகண்டம், ஆதிமூலம், எல்லை, மனிதனின் கருத்து, காவியம் ஆகிவைகளாய் விளங்கும் இறைவா! அறிவுக்கும் அறிவே! புண்டரீகம் என்னும் வெண்தாமரையினுள்ளே, தத்தம் சூரிய, சந்திர, அக்கினி கலைகளை ஒன்று சேர்த்துத் தவம் இயற்றும் புண்ணியர்கள் உணரும் நுண்மையான உணர்வுதான் நீ.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலியல்_வசைச்_சொற்கள்&oldid=3829215" இலிருந்து மீள்விக்கப்பட்டது