பாலாம்பிகா
பாலாம்பிகா (Balambika), ("பாலா" என்றும் அழைக்கப்படுகிறார்) இந்து மதத்தில் வழிபாடு செய்யப்படும் ஒரு பெண் தெய்வம் ஆவார். இவரது கோயில், தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் உள்ளது. இவருடைய பெயருக்கு "அறிவின் தெய்வம்" அல்லது "குழந்தை தேவி" என்று பொருள் அளிக்கப்படுகிறது. [1]
பாலம்பிகாவின் விளக்கம் குறித்து, புராண நூலில் பாலம்பிகா தசகம் காணப்படுகிறது. இவர், நான்கு கைகள் உடையவராகவும், ஒவ்வொரு உள்ளங்கையிலும் சிவப்பு வட்டம் கொண்டவராக ஓளிப்படங்களில் காணப்படுகிறார். [2] இவர், ஒரு புனிதமான பாடப்புத்தகத்தையும் ஒரு ஜபமாலையையும் தன் இரண்டு கைகளில் வைத்திருப்பவராக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். பாலாம்பிகா ஒரு குழந்தையாகக் கருதப்படுகிறார். மேலும் ஒரு சிறந்த வாழ்க்கைக்கு தேவையான உண்மையான அறிவு, கல்வி, ஞானம், சக்தி மற்றும் செழிப்பு ஆகியவற்றை தருபவராக உள்ளார் என்று கூறப்படுகிறது. [3] இவர், சில சமயங்களில் குழந்தைகளின் தெய்வம் என்று அழைக்கப்படுகிறார். ஆகவே, இவருடைய கோயில் குழந்தைகளுக்கு அர்ப்பணிக்கும்படி கட்டப்பட்டது.
மூலமந்திரம்
[தொகு]“ஐம் க்லீம் சௌ, சௌ க்லீம், ஐம், ஐம், க்லீம், சௌ. " [4]
"ஐம்" என்பது கற்றலைக் குறிக்கிறது.
"க்லீம்" என்பது காந்த ஈர்ப்பைக் குறிக்கிறது.
"சௌ" என்பது செழிப்பைக் குறிக்கிறது.
இந்த எளிய மூன்று சொல் மூலமந்திரம் அனைத்து நவீன உலகப் பிரச்சினைகளுக்கும் தீர்வாகக் கருதப்படுகிறது. [3] இந்த மூலமந்திரத்தை உச்சரிக்கும்போது, பாலம்பிகா உடனடியாக வந்து அருள் புரிவார் என்று நம்பப்படுகிறது. மேலும், "பாலா" என்ற இவரது பெயரை ஓதும்போது, தெய்வமாக இருக்கும் இவர் எப்போதும் கேட்பார் என்கிற நம்பிக்கை நிலவுகிறது.
கோயில்
[தொகு]இந்தியாவிலுள்ள, தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் காமராசவள்ளியில் பாலம்பிகாவுக்கு ஒரு கோயில் உள்ளது. இது சுமார் 1000–2000 ஆண்டுகள் பழமையானது எனக் கருதப்படுகிறது. இக்கோயிலின் சுவர்களில் சிற்பங்கள் காணப்படுகின்றது. மேலும், கார்கோடகன் என்கிற நாகர்களின் அரசன், விநாயகர் மற்றும் நந்தியுடன் சிவ பூசை (சிவன் வழிபாடு) செய்யும் கதையைக் குறிப்பிடும் சிற்பங்கள் இங்கு உள்ளது. [5] மேலும், 1950ம் ஆண்டில் காஞ்சி மடத்தைச் சேர்ந்த மகா பெரியவர் என்று அழைக்கப்படும் சந்திர சேகர சுவாமிகள் இங்கு வந்து கார்கோடேசுவரருக்கும் பாலாம்பிகைக்கும் அபிசேக, ஆராதனை செய்து வழிபட்டதாக கோயில் குறிப்பு காணப்படுகிறது.
பரிகாரத்தலம்
[தொகு]பன்னிரெண்டு இராசி சக்கரத்தில் ஒன்றான, கடகம் இராசி மற்றும் கடக லக்கினத்தில் பிறந்தவர்கள், தங்கள் வாழ்க்கையில் நலம் பெற்று வாழ இங்கு வந்து பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. மேலும், நாக தோஷம் உடையவர்களின் பரிகாரத் தலமாகவும் இக்கோயில் உள்ளது. இங்கு வந்து கார்கோடேசுவர் - பாலாம்பிகாவை வழிபாடு செய்வதன் மூலம், திருமணத் தடை நீங்கும் எனவும், குழந்தைப் பேறு மற்றும் நல்ல வாழ்க்கை அமையப்பெறும் எனவும் இக்கோயிலின் தல வரலாறு குறிப்பிடுகிறது.
கொண்டாடப்படும் திருவிழாக்கள்
[தொகு]விழா | நேரம் |
---|---|
பிரதோச வழிபாடு | மாதம் இருமுறை |
தமிழ் புத்தாண்டு தினம் | ஏப்ரல் 14 |
ஆடி பூரம் | சூலை/ஆகஸ்ட் |
விநாயகர் சதுர்த்தி | ஆகஸ்ட்/செப்டம்பர் |
நவராத்திரி | செப்டம்பர்-அக்டோபர் |
ஐப்பசி அன்னாபிசேகம் | அக்டோபர்-நவம்பர் |
மார்கழி திருவாதிரை | டிசம்பர்-ஜனவரி |
பாலாம்பிகா தசகம்
[தொகு]இவரை விவரிக்கும் தோத்திரப் பாடல்கள் அடங்கிய புனித நூல் 'பாலம்பிகா தசகம்' என்று அழைக்கப்படுகிறது. [6] இந்த உரை பாலாம்பிகா அல்லது இவரிடம் இருப்பதை விவரிக்க "யார்" அல்லது "யாருடையது" என்ற சொற்றொடரைப் பயன்படுத்துகிறது. ஒவ்வொரு வரியும் "ஓ பாலாம்பிகா, தயவுசெய்து என்னைப் பார்த்து இரக்கமுள்ள பார்வையை பொழியுங்கள்" என்று தொடங்குகிறது. இந்த நூலில், இவரைப் பற்றிய வருணனை காணப்படுகிறது. முதலில் இந்த நூல் சமசுகிருதத்தில் எழுதப்பட்டது. பின்னர் பி.ஆர். ராமச்சந்தர் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.
குறிப்புகள்
[தொகு]- ↑ "Skanda's Sister Jyoti". Murugan.org. 2012-08-12. Retrieved 2013-11-06.
- ↑ "Balambika Image". Balambikathirupanitrust.webs.com. Archived from the original on 2014-09-27. Retrieved 2013-11-06.
- ↑ 3.0 3.1 "Bala Tripurasundari Moolamantram". Sribalathirupurasundari.com. Archived from the original on 2013-12-24. Retrieved 2013-11-06.
- ↑ "Home - Balambika Divya Sangam (A Balambika Thirupani Trust Initiative)". Balambikathirupanitrust.webs.com. Retrieved 2013-11-06.
- ↑ "Balambika-Karkodeswarar Temple : Balambika-Karkodeswarar Temple Details | Balambika-Karkodeswarar - Kamarasavalli | Tamilnadu Temple | பாலாம்பிகா சமேத கார்க்கோடேஸ்வரர்". Temple.dinamalar.com. Retrieved 2013-11-06.
- ↑ "Balambika Dasakam - Hindupedia, the Hindu Encyclopedia". Hindupedia.com. Retrieved 2013-11-06.