பாலக்காடு பாசல் இவான்சிலிக்கல் மிஷன் மேல்நிலை பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாசல் இவான்சிலிக்கல் மிஷன் மேல்நிலை பள்ளி, பாலக்காடு

இந்திய தேசத்தில் கடவுளின் சொந்த தேசம் என அழைக்கப்படும் கேரள மாநிலத்தில் பாலக்காடு எனும் ஊரில் அரசு உதவியில் இயங்கும் பள்ளி தான் பாசல் இவான்சிலிக்கல் மிஷன் மேல்நிலை பள்ளி.(Basel Evangelical Mission Higher Secondary School). இது பாலக்காடு எனும் ஊரின் இருதய பாகத்தில் அமைந்துள்ளது.

வரலாறு: 1858 – ம் வருடம் மே மாதத்தில் பாசல் இவான்சிலிக்கல் மிஷனின் அருட்பணியாளர்களில் ஒருவரான போதகர் ஜெ. ஸ்ரோபல் என்பவரால் ஒரு ஆங்கிலப் பள்ளியாக நிறுவபட்டது. திரு. போதன் என்பவர் இப்பள்ளிக்கூடத்தின் முதல் தலைமை ஆசிரியர். 1860-ம் ஆண்டு இப்பள்ளி ஆங்கிலோ வெர்னாகுலர் பள்ளியாக உருமாற்றமடைந்தது. 1854-ம் வருடத்தில் நடுநிலை பள்ளியாகவும், 1905-ம் வருடத்தில் உயர்நிலை பள்ளியாகவும் உயர்வு பெற்றது. 2000-ம் வருடத்தில் மேல்நிலை பள்ளியாக மாறினது.

1910-ம் ஆண்டு இப்பள்ளியின் முக்கியமான கட்டிடம் கட்டப்பட்டது. ஒரு ஜெர்மானிய அருட்பணியாளரும் கட்டிடக்கலை வல்லுனருமான மறைதிரு. டி. மொவ் என்பவரால் வரையப்பட்டு கட்டப்பட்ட ஒரு சிறந்த கட்டிடமாக திகழ்கிறது. பாசல் இவான்சிலிக்கல் மிஷன் மேல்நிலை பள்ளி (Basel Evangelical Mission Higher Secondary School) யின் கட்டிடக்கலைக்கு இணையான ஒரு கட்டிடமும் கேரள மானிலத்தில் இல்லை என்றே சொல்லலாம்.

மதராஸ் மாகாணத்தின் ஆரம்ப காலங்களில் மலபார் மாவட்டத்தில் உள்ள பழமை வாய்ந்த பள்ளிகளில் பாசல் இவான்சிலிக்கல் மிஷன் மேல்நிலை பள்ளியும் ஒன்றாகும். இப்பொழுதுள்ள கேரள மானிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில் இதுவே பழமை வாய்ந்தப்பள்ளி.

தற்பொழுது இப்பள்ளி தென்னிந்திய திருச்சபையின் வடக்கேரளப்பேராயத்தின் மேற்பார்வையில் இயங்கிக் கொண்டு வருகிறது. இப்பள்ளியின் முதல்வராக திரு. தோமஸ் டி. குருவில்லா அவர்களும், தலைமை ஆசிரியையாக திருமதி. ஆனீ குரியன் அவர்களும் இருந்து செயல்படுகிறார்கள்.

இப்பள்ளி அதன் ஆரம்பகால முதல் ஆயிரக்கணக்கான மக்களின் கல்வித்தேவையை பூர்த்தி செய்து கொண்டு வருகிறது. இப்பள்ளி, சாதி மத பேதமின்றி எல்லாவர்க்கும் சேர்க்கை அளிக்கிறது