பாலகோட் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாலகோட் போர் (Battle of Balakot) மகாராஜா இரஞ்சித் சிங் மற்றும் சையத் அகமது பரேல்வி ஆகியோரின் படைகளுக்கு இடையே பாக்கித்தானின் மன்செரா மாவட்டத்திலுள்ள பாலகோட்டில் 6 மே 1831 அன்று நடந்தது. பரேல்வி சீக்கியர்களுக்கு எதிராக ஜிகாத் அறிவித்து பாலகோட்டில் ஒரு முகாமை நிறுவினார். ஷா இஸ்மாயில் தெல்வி மற்றும் அவரது பழங்குடியினருடன் சேர்ந்து, சீக்கியர்களை விடியற்காலையில் தாக்கினார். போர் நாள் முழுவதும் நீடித்தது. சீக்கிய வீரர்கள் இறுதியில் சையத் அகமது பரேல்வியைக் கொன்றனர். மேலும் அவரது நூற்றுக்கணக்கான சீடர்களும் கொல்லப்பட்டனர். [1] [2] [3]

போரில், ஷா இஸ்மாயில் தெல்வியும் சீக்கிய வீரர்களால் கொல்லப்பட்டார். பாலகோட்டைத் தங்கள் பேரரசுடன் சேர்த்து, சீக்கியப் பேரரசின் மேற்கு எல்லையை ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் ஆழமாக விரிவுபடுத்திய சீக்கியர்களுக்கு இந்தப் போர் ஒரு வெற்றியாகும். இந்த பெரிய வெற்றிக்குப் பிறகு, சீக்கியர்கள் ஆப்கானியர்களிடமிருந்து பெசாவரைக் கைப்பற்றுவதை நோக்கி தங்கள் படைகளைத் திருப்பினர். [4]

சான்றுகள்[தொகு]

  1. Ahmad, M. (1975). Saiyid Ahmad Shahid: His Life and Mission (No. 93). Lucknow: Academy of Islamic Research and Publications. Page 27.
  2. Adamec, Ludwig W. (2009), Historical Dictionary of Islam, Scarecrow Press, ISBN 978-0-8108-6303-3
  3. Jalal, Ayesha (2009), "The Martyrs of Balakot", Partisans of Allah: Jihad in South Asia, Harvard University Press, pp. 58–113, ISBN 978-0-674-03907-0
  4. Jacques, Tony. Dictionary of Battles and Sieges. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலகோட்_போர்&oldid=3776714" இலிருந்து மீள்விக்கப்பட்டது