பாலகுமாரன் மகாதேவா
பக்கு மகாதேவா Baku Mahadeva | |
---|---|
பிறப்பு | 29 அக்டோபர் 1921 |
இறப்பு | 29 நவம்பர் 2013 கொழும்பு, இலங்கை | (அகவை 92)
இனம் | இலங்கைத் தமிழர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | கொழும்பு றோயல் கல்லூரி |
பணி | குடிமைப் பணியாளர் |
பெற்றோர் | சேர் அருணாசலம் மகாதேவா, சிவகாமி அம்மாள் |
வாழ்க்கைத் துணை | சுந்தரி |
பிள்ளைகள் | குமார் மகாதேவா, ஈசுவரி |
உறவினர்கள் | சேர் பொன்னம்பலம் அருணாசலம் |
பக்கு மகாதேவா என அழைக்கப்படும் பாலகுமாரன் மகாதேவா[1] (Balakumara Mahadeva பாலகுமாரா மகாதேவா, 29 அக்டோபர் 1921 – 29 நவம்பர் 2013) என்பவர் கல்விமானும், முன்னணி இலங்கைத் தமிழ் அரசு அதிகாரியும் ஆவார்.
ஆரம்ப வாழ்க்கையும் குடும்பமும்
[தொகு]பாலகுமாரா அருணாசலம் மகாதேவா, சிவகாமி அம்மாள் ஆகியோருக்கு 1921 அக்டோபர் 29 இல் பிறந்தவர்.[2][2][3] இவருடன் உடன் பிறந்தவர் சுவர்ணம் நடராஜா. சேர் பொன்னம்பலம் அருணாசலத்தின் பேரன் ஆவார். இவர் கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி பயின்றவர்.[4][5] பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் இவர் இலண்டன் பல்கலைக்கழகம் சென்று கணிதத்தில் இளங்கலை, மற்றும் முதுகலைப் பட்டங்கள் பெற்றார்.[6]
மகாதேவா சேக தியாகராஜாவின் மகள் சுந்தரி என்பவரைத் திருமணம் புரிந்தார்.[1][2] இவர்களுக்கு ஆனந்தகுமார், ஈசுவரி என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.[1]
பணி
[தொகு]மகாதேவா இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கணித விரிவுரையாளராகப் பணியாற்றிய பின்னர், 1945 சனவரியில் இலங்கைக் குடிமை சேவையில் இணைந்தார்.[2][6] 1949 ஆம் ஆண்டில் பாதுகாப்பு அமைச்சில் துணைச் செயலராகவும், 1952 இல் காணி அமைச்சில் துணைச் செயலராகவும், 1958 இல் வேளாண்மை மற்றும் உணவு அமைச்சில் நிரந்தர செயலராகவும் பணியாற்றினார்.[2][3] அத்துடன் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் செயலராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.[3][7] திறைசேரியில் செயலாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
பிற்கால வாழ்க்கை
[தொகு]குடிமைப் பணியில் இருந்து இளைப்பாறிய பின்னர் இவர் மலேசியாவில் ஐக்கிய நாடுகள் அவையில் பணியாற்றினார்.[6][8] பின்னர் இலங்கையில் தேசிய அபிவிருத்தி வங்கியின் தலைவராகவும், இலங்கை மக்கள் வங்கியின் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.[2][3] பல தனியார் நிறுவனங்களில் தலைவராக இருந்தார்.[9][10]
சமூகப் பணி
[தொகு]மகாதேவா கொழும்பு பொன்னம்பலவாணேசுவரர் கோயில், முகத்துவாரம் அருணாசலேசுவர கோயில் ஆகியவற்றின் அறங்காவல் சபைத் தலைவராக செயல்பட்டார்.[3] 1990 ஆம் ஆண்டில் இவருக்கு இலங்கை அரசின் இரண்டாவது பெரும் தேசிய விருதான தேசமானிய பட்டம் வழங்கப்பட்டது.[11]
மகாதேவா 2013 நவம்பர் 29 இல் கொழும்பில் காலமானார்.[3][7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Obituaries". சண்டே ஒப்சேர்வர். 1 டிசம்பர் 2013 இம் மூலத்தில் இருந்து 2013-12-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131207175848/http://www.sundayobserver.lk/2013/12/01/main_Obituaries.asp.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. p. 95.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 "Deshamanya Baku Mahadeva passes away". சண்டே டைம்சு]]. 1 டிசம்பர் 2013. http://www.sundaytimes.lk/131201/news/deshamanya-baku-mahadeva-passes-away-75127.html.
- ↑ de Silva, Raja (13 யூன் 2004). "Memories of an upright man: C.A. Coorey". சண்டே டைம்சு. http://www.sundaytimes.lk/040613/plus/appreciation.html.
- ↑ de Silva, Charitha P. (11 யூலை 2004). "Chandana Aelian Coorey". த சண்டே லீடர். http://www.thesundayleader.lk/archive/20040711/letters.htm.
- ↑ 6.0 6.1 6.2 "Annual Report 2007" (PDF). Overseas Reality (Ceylon) PLC. p. 11.
- ↑ 7.0 7.1 "Death of Baku Mahadeva". சண்டே ஐலன்ட். 1 டிசம்பர் 2013 இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304040445/http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=93187.
- ↑ "Baku Mahadeva passes away". த நேசன். 1 டிசம்பர் 2013 இம் மூலத்தில் இருந்து 2013-12-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131204185212/http://www.nation.lk/edition/news-online/item/23297-baku-mahadeva-passes-away.html.
- ↑ "Parquet reviving under new ownership". ஐலண்டு. 18 சனவரி 2004 இம் மூலத்தில் இருந்து 2013-12-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131212101715/http://www.island.lk/2004/01/18/busine03.html.
- ↑ "Death of Baku Mahadeva". சண்டே ஒப்சேர்வர். 1 டிசம்பர் 2013 இம் மூலத்தில் இருந்து 2013-12-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131207180417/http://www.sundayobserver.lk/2013/12/01/new50.asp.
- ↑ "National Awards". சனாதிபதி செயலகம்.