பாற்குடம் எடுத்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தைப்பூசத் திருவிழாவிற்குப் பால்க்குடம்/பாற்குடம் எடுத்துச் செல்லும் பக்தர்கள்

பாற்குடம் எடுத்தல் (Palkkudam Eduthal) என்பது இந்து சமய வழிபாடுகளில் ஒன்றாகும். கௌமாரம், சாக்தம் வழிபாடுகளில் இந்தப் பால்க்குடம் எடுத்தல் முக்கியத்துவம் பெறுகிறது. வேண்டுதல்கள், நேர்த்திக் கடன், குடும்ப வளமை போன்ற காரணங்களால் பால்க்குடம்/பாற்குடம் எடுக்கின்றார்கள்.

கையில் காப்புக் கட்டி, எட்டு நாள் விரதம் இருப்பர். பால்க்குடம் எடுக்கும் நாளில் அருகிலிருக்கும் விநாயகர், சிவன் கோவிலுக்கு சென்று மஞ்சள் நிற ஆடை அணிந்து சொம்பு, குடம் போன்றவற்றில் கறந்த பாலைப் பூசை செய்கிறார்கள். பின் அங்கிருந்து ஊர்வலமாகக் கிளம்பி அம்மன் அல்லது முருகன் கோவிலை அடைந்து கொண்டுவந்திருக்கும் பாலை அபிசேகத்திற்குப் பயன்படுத்துகிறார்கள்.

குடும்ப நலனுக்காக மேற்கொள்ளப்படும் இந்த வழிபாடு முறை, அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்களின் நலனுக்காகவும் சமீபகாலமாக மேற்கொள்ளப்படுகின்றன.[1]

ஆதாரங்கள்[தொகு]

  1. ஜெயலலிதா பிறந்த நாள்: 1,068 பால்குடம் ஊர்வலம் 22 February 2016 தினமணி நாளிதழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாற்குடம்_எடுத்தல்&oldid=3381379" இருந்து மீள்விக்கப்பட்டது