அரசு பார்வையற்றோர் நடுநிலைப்பள்ளி, சேலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பார்வையற்றோர் அரசு நடுநிலைப்பள்ளி, சேலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பார்வையற்றோர் அரசு நடுநிலைப்பள்ளி என்பது தமிழ்நாட்டின், சேலம் மாவட்டம், சேலம் செவ்வாய்பேட்டை, பங்களா தெருவில் பார்வையற்ற மாணவர்களுக்காக உள்ள ஒரு சிறப்புப் பள்ளி ஆகும்.[1]

வரலாறு[தொகு]

இப்பள்ளி 1949 ஆண்டில் பார்வையற்றவர்களுக்காகத் தொடங்கப்பட்ட ஒரு சிறப்புப் பள்ளியாகும். இது தமிழகத்தில் பார்வையற்றவர்களுக்காக தொடங்கப்பட்ட இரண்டாவது பள்ளி என்ற சிறப்புக்குறியது. தஞ்சாவூரில் பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியும், சென்னையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியும், திருச்சியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் உள்ளன. சேலம், புதுக்கோட்டை, மதுரை நகரங்களில் பார்வையற்றோருக்கான அரசு நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. சிவகங்கை, கடலூர், தருமபுரி, கோவை ஆகிய நகரங்களில் பார்வையற்ற மாணவர்களுக்கான தொடக்கப் பள்ளிகள் உள்ளன.[2]

பள்ளியின் நிலை[தொகு]

இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை வகுப்புகள் உள்ளன. மாணவர்களுக்கு உணவு, உடை போன்றவை இலவசமாக வழங்கப்படுகின்றன. இப்பள்ளியில் 2017 ஆம் ஆண்டைய நிலவரத்தில் 45 மாணவ, மாணவியர் பயின்றனர். இங்கு நான்கு ஆசிரியர்கள் தற்போது பணியில் உள்ளனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "பார்வையற்றோர் பள்ளியில் மாணவ, மாணவியர் சேர்க்கை". Dinamalar. பார்க்கப்பட்ட நாள் 2021-12-31.
  2. "பார்வையற்ற மாணவர்களுக்கான அரசுப் பள்ளிகளில் பிரெய்லி புத்தகங்கள் எப்போது வழங்கப்படும்?- அச்சடிக்கும் பணி தொடங்கப்படவில்லை என பெற்றோர், ஆசிரியர் வேதனை". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-12-31.
  3. எஸ். விஜயகுமார் (சூலை 2017). "சேரத்தில் 68 ஆண்டு பாரம்பரியம் கொண்ட பார்வையற்றோர் பள்ளியை தரம் உயர்த்த கோரிக்கை". தி இந்து. doi:22.