பார்ப்பன வாகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பார்ப்பன வாகை என்னும் துறைப் பாடல்கள் புறநானூற்றுத் தொகுப்பில் இரண்டு [1] உள்ளன. இவை வாகைத்திணையைச் சேர்ந்த பாடல்கள்.

 • நீள்சடை முதல்வனாகிய சிவபெருமான் வாக்கின்படி நடந்துகொள்பவன். நான்கு வேதங்களையும், ஆறு சமயங்களையும் அறிந்தவன். ஆறு சமயங்களில் சொல்லப்படும் செய்திகளை மற்றவர்களிட்ம் சொல்லி, வாதிட்டு, சிவ நெறியின் மேன்மையை நிலைநாட்டியவன். 21 வகையான வேள்விகளை முட்டுப்பாடில்லாமல் செய்து முடிக்கும் திறம் பெற்றவன். சோணாட்டுப் பூச்சாற்றூர்ப் பார்ப்பான் கவுணியன் விண்ணத்தாயன் என்னும் பார்ப்பான் மற்றவர்களைப் போலக் கொடை வள்ளல் மட்டுமல்லாது இத்தகைய பண்புகளை உரையவன் என்பதை ஆவூர் மூலங்கிழார் என்னும் புலவர் விளக்கிக் காட்டுகிறார். [2]
 • போருக்குக் காலம் கணித்துச் சொன்ன பார்ப்பான் வயலைக் கொடி போல வாடிய வயிற்றை உடையவனாம். குந்தி குந்தி நடப்பவனாம். [3]

தொல்காப்பியம் இதனை “அறு வகைப் பட்ட பார்ப்பனப் பக்கம்” [4] எனக் குறிப்பிடுகிறது. புறப்பொருள் வெண்பாமாலை இதனைப் பார்ப்பன முல்லை எனக் குறிப்பிடுகிறது.[5]

அடிக்குறிப்பு[தொகு]

 1. புறநானூறு 166, 305
 2. நன்று ஆய்ந்த நீள் நிமிர் சடை
  முது முதல்வன் வாய் போகாது,
  ஒன்று புரிந்த ஈர் இரண்டின்,
  ஆறு உணர்ந்த ஒரு முது நூல்
  இகல் கண்டோர் மிகல் சாய்மார்,
  மெய் அன்ன பொய் உணர்ந்து,
  பொய் ஓராது மெய் கொளீஇ,
  மூ ஏழ் துறையும் முட்டு இன்று போகிய
  உரைசால் சிறப்பின் உரவோர் மருக! (புறம் 166)

 3. வயலைக் கொடியின் வாடிய மருங்குல்,
  உயவல் ஊர்தி, பயலைப் பார்ப்பான் (மதுரை வேளாசான் பாட்டு புறம் 305)
 4. தொல்காப்பியம் புறத்திணையியல் 16
 5. கால் மலியும் நறுந் தெரியல் கழல் வேந்தர் இகல் அவிக்கும்
  நான் மறையோன் நலம் பெருகும் நடுவு நிலை உரைத்தன்று. (புறப்பொருள் வெண்பாமாலை 172)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்ப்பன_வாகை&oldid=1267568" இருந்து மீள்விக்கப்பட்டது