மதுரை வேளாசான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மதுரை வேளாசான் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது புறநானூறு 305.

புலவர் பெயர் விளக்கம்[தொகு]

ஆசான் = நன்னடத்தையால் பாடம் புகட்டும் ஆசிரியன். வேளாசான் = வேள்வி செய்யும் ஆசான். வேள்வி = மக்களுக்குப் பயன்படும் உதவி. போர் நிற்பதற்கு உதவிய பாங்கு பாடலில் கூறப்பட்டுள்ளது. இந்த உதவி வேள்விதானே!

புறநானூறு நூலைத் தொகுத்தவர் பாடற்பொருளால் இவருக்குப் பெயர் சூட்டியுள்ளார்

பாடல் சொல்லும் செய்தி[தொகு]

  • திணை - வாகை
  • துறை - பார்ப்பன வாகை (பார்ப்பனன் ஒருவன் தன் செயலால் வெற்றி பெற்றதைக் கூறுவது)

பார்ப்பனின் கோலம்[தொகு]

வயலைக் கொடி போல வாடிய வயிற்றுப் பகுதியை உடையவன் அந்தப் பார்ப்பனன்.
அவன் பயலைப் பார்ப்பான் (பச்சைப் பார்ப்பான்)
அவன் உயவல் ஊர்தியான் (உந்தி உந்தி நடப்பதே அவன் ஊர்தி)

பார்ப்பனன் செயல்[தொகு]

இரவிலே வந்தான்.
ஒப்புதலுக்காகக் காத்திருக்காமல் கோட்டையை முற்றுகையிட்டிருக்கும் அரசனிடம் சென்றான்.
அந்த அரசனிடம் அவன் சொன்ன சொற்கள் சிலவே.

பார்ப்பன வாகை[தொகு]

விளைவு முற்றுகை விலக்கிக்கொள்ளப்பட்டது.

முற்றுகை விலக்கப்பட்ட நிகழ்வுகள்[தொகு]

மதில் மேல் சாத்தப்பட்டிருந்த ஏணி நீக்கப்பட்டது.
அகழியைக் கடக்கக் கிடத்தப்பட்டிருந்த சீப்பு விலக்கப்பட்டது
போரிடுவதற்காக யானைக்குப் பூட்டப்பட்ட மணி அவிழ்க்கப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுரை_வேளாசான்&oldid=2718165" இருந்து மீள்விக்கப்பட்டது