பார்சி அஞ்சுமன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பார்சி அஞ்சுமன் கோயில் (Parsi Anjuman Baug) என்பது தென்னிந்திய மாநிலமான, கேரளத்தின், கோழிக்கோடு மாவட்டதில், கோழிக்கோடு நகரின், எஸ். எம். தெருவில் உள்ள பார்சி மக்களின் நெருப்புக் கோவில் ஆகும். இக்கோயில் 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

வணிகம் செய்ய இங்கு வந்த பார்சி சமூகத்தினரால் இது கட்டப்பட்டது. மலபாரின் வர்த்தகத்திற்கு பெரிதும் பங்களித்த நூற்றுக்கும் மேற்பட்ட பார்சி குடும்பங்கள் கோழிக்கோட்டில் குடியேறின. அவர்கள் கட்டிய கோயிலே, இந்த அஞ்சுமான் பாக் எனப்படும் தீக்கோயிலாகும். இதுவே கேரளத்தில் உள்ள ஒரே பார்சி கோயிலாகும். இந்த கோயில் தற்போது கோழிக்கோட்டில் மீதமுள்ள ஒரே பார்சி குடும்பமான மார்ஷல்களால் பராமரிக்கப்படுகிறது. பெரும்பாலான பார்சிகள் மாநிலத்திலிருந்து புலம்பெயர்ந்து சென்றுவிட்டாலும், இந்தக் கோயில் கோழிக்கோட்டுக்கும் பார்சிகளுக்கும் உள்ள தொடர்புக்கு ஒரு சான்றாகும்.[1]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்சி_அஞ்சுமன்_கோயில்&oldid=3022260" இலிருந்து மீள்விக்கப்பட்டது