பார்க்கென்டைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பார்க்கென்டைன்
பெல்சிய பார்கென்டைன் மேர்க்கேட்டர்
வகைபாய்க்கப்பல்
அமைக்கப்பட்ட நாடுவடமேற்கு ஐரோப்பாவும் அமெரிக்காவும்

இசுக்கூனர் பார்க் எனவும் அழைக்கப்படும் பார்க்கென்டைன் (barquentine) என்பது, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாய்மரங்களைக் கொண்ட பாய்க்கப்பல். இது முன் பாய்மரத்தில் குறுக்குப் பாயமைப்பும். முதன்மை, பின் மற்றும் பிற பாய்பரங்களில் முன்-பின் பாயமைப்பும் கொண்டது.

பார்க்கென்டைன் பாயமைப்பு[தொகு]

முழுப் பாயமைப்புக் கொண்ட கப்பல்கள் எல்லாப் பாய்மரங்களிலும் குறுக்குப் பாயமைப்பையும், "பார்க்" கப்பல் முன் மற்றும் முதன்மைப் பாய்மரங்களில் குறுக்குப் பாயமைப்பையும் கொண்டிருக்க பாக்கென்டைனில் முன் பாய்மரம் மட்டுமே குறுக்குப் பாயமைப்பைக் கொண்டுள்ளது.[1] சிறிய பணிக்குழுவுடன் இயங்கக்கூடிய தன்மை, பெருமளவு சரக்குகளைக் கொண்டுசெல்லும்போது காற்றின் திசைக்கு நெருக்கமாகச் செல்லக்கூடிய வல்லமை என்பன 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், இக்கப்பலைப் பிரபலமாக்கின.

இன்று, பார்க்கென்டைன்கள் நவீன "டோல்" கப்பல்கள் தொடர்பிலும், பாய்க்கப்பல் பயிற்சி தொடர்பிலும் பெயர் பெற்றுள்ளது. இவற்றின் முன்-பின் பாயமைப்பை இலகுவாகவும் செயற்றிறனுடனும் இயக்க முடியும் அதேவேளை, குறுக்குப் பாயமைப்புக்கொண்ட ஒற்றைப் பாய்மரம், தொலை தூரப் பயணத்துக்கான வேகத்தையும், துறைமுகங்களில் நல்ல தோற்றத்தையும் வழங்குகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்க்கென்டைன்&oldid=3562814" இருந்து மீள்விக்கப்பட்டது