பாரா-கிரெசிடின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரா-கிரெசிடின்
Skeletal formula of para-cresidine
Ball-and-stick model of the para-cresidine molecule
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-மெத்தாக்சி-5-மெத்திலனிலின்
இனங்காட்டிகள்
120-71-8 Y
ChemSpider 13869579 N
InChI
  • InChI=1S/C8H11NO/c1-6-3-4-8(10-2)7(9)5-6/h3-5H,9H2,1-2H3 N
    Key: WXWCDTXEKCVRRO-UHFFFAOYSA-N N
  • InChI=1/C8H11NO/c1-6-3-4-8(10-2)7(9)5-6/h3-5H,9H2,1-2H3
    Key: WXWCDTXEKCVRRO-UHFFFAOYAY
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C19216 Y
பப்கெம் 8445
வே.ந.வி.ப எண் BZ6720000
SMILES
  • CC1=CC(=C(C=C1)OC)N
பண்புகள்
C8H11NO
வாய்ப்பாட்டு எடை 137.179
தோற்றம் வெண்மையான படிகங்கள்
உருகுநிலை 51.5 °C (124.7 °F; 324.6 K)
கொதிநிலை 235 °C (455 °F; 508 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

பாரா-கிரெசிடின் (para-Cresidine) என்பது CH3OC6H3(CH3)NH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் கரிமக் கரைப்பான்களில் கரைகிறது. அமீன் மற்றும் மெத்தாக்சி வேதி வினைக்குழுக்கள் இரண்டின் அம்சங்களையும் பாரா-கிரெசிடின் சேர்மம் கொண்டிருக்கிறது. சாயங்கள் மற்றும் நிறமிகள் தயாரிப்பின்போது ஓர் இடைநிலை வேதிப்பொருளாக இது உருவாகிறது.

தயாரிப்பு[தொகு]

4-குளோரோதொலுயீனை வேதி வினைகளுக்கு உட்படுத்தி சில படிநிலைகளில் இதை தயாரிக்க முடியும். முதலில் 4-குளோரோதொலுயீன் நைட்ரோயேற்றம் செய்யப்படுகிறது. வினையில் உருவாகும் 3-நைட்ரோ-4-குளோரோதொலுயீன் மெத்தாக்சைடு மூலப்பொருட்களுடன் வினையில் ஈடுபட்டு 4-மெத்தாக்சி-2-நைட்ரோதொலுயீன் உருவாகிறது. பின்னர் இந்த நைட்ரோ சேர்மம் ஒடுக்கப்பட்டு பாரா-கிரெசிடின் என்ற அனிலின் கிடைக்கிறது [1].

வினை[தொகு]

பாரா-கிரெசிடினுடன் ஒலீயம் எனப்படும் புகையும் கந்தக அமிலத்தைச் சேர்த்து சல்போனேற்றம் செய்தால் 4-அமினோ-5-மெத்தாக்சி-2-மெத்தில்பென்சீன்சல்போனிக் அமிலம் உருவாகிறது. இந்த சல்போனிக் அமிலம் உணவுக்கு சிவப்பு நிறமூட்டும் அலூரா சிவப்பு என்ற அசோ சாயத்தை தயாரிக்க உதவும் ஒரு முன்னோடிச் சேர்மமாகும் [1].

பாரா-கிரெசிடினிலிருந்து தயாரிக்கப்படும் அலூரா சிவப்பு ஏ.சி எனப்படும் உணவு நிறமி

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 P. F. Vogt, J. J. Gerulis, "Amines, Aromatic" in Ullmann’s Encyclopedia of Industrial Chemistry, 2005, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a02_037

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரா-கிரெசிடின்&oldid=2929062" இலிருந்து மீள்விக்கப்பட்டது