பாரத் கோயங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரத் கோயங்கா
Bharat Goenka
பிறப்புபாரத் கோயங்கா
தேசியம்இந்தியர்
பணிஇந்திய தொழிலதிபர்
இயக்குநராக உள்ள
நிறுவனங்கள்
டாலி சொல்யூசன்சு
விருதுகள்

பாரத் கோயங்கா (Bharat Goenka) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் ஆவார். டாலி சொலியூசன்சு என்ற பன்னாட்டு நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனராக உள்ளார். 2020 ஆம் ஆண்டில், வர்த்தகம் மற்றும் தொழில் துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசிடமிருந்து பத்மசிறீ விருதைப் பெற்றார். [1] [2] [3] [4] [5] [6]

வாழ்க்கை[தொகு]

இந்தியத் தொழில் அதிபரான சியாம் சுந்தர் கோயங்காவின் மகனாக பாரத் கோயங்கா , பிறந்தார். பிசப் காட்டன் ஆண்கள் பள்ளியில் இவர் படித்தார். கணிதப் பாடத்தில் பட்டம் பெற்றார். [7] கோயங்கா 1986 ஆம் ஆண்டு தனது தந்தையுடன் இணைந்து டாலி சொலியூசன்சு என்ற நிறுவனத்தை நிறுவினார். 1999 ஆம் ஆண்டு பியுட்ரானிக்சு என்ற கணக்கியல் பயன்பாடு என்ற மென்பொருளை உருவாக்கினார்.[8]

2011 ஆம் ஆண்டில் மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய சங்கம், கோயங்காவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருதையும் இந்திய மென்பொருள் தயாரிப்புத் துறையின் தந்தை" என்ற பட்டத்தையும் வழங்கியது. [9] 2014 ஆம் ஆண்டில் கம்ப்யூட்டர் சொசைட்டி ஆஃப் இந்தியா கெளரவ உறுப்பினர் விருதை [10] வழங்கி சிறப்பித்தது. 2020 ஆம் ஆண்டில், வர்த்தகம் மற்றும் தொழில் துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசிடமிருந்து பத்மசிறீ விருதைப் பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sanjeev Bikchandani, Bharat Goenka Receive the Prestigious Award" (in en). https://www.dqindia.com/padma-awards-2020-sanjeev-bikchandani-bharat-goenka-receive-prestigious-award/. 
  2. "141 named for Padma Awards, Sushma, Jaitley & George Fernandes get Padma Vibhshan" (in en). http://www.uniindia.com/141-named-for-padma-awards-sushma-jaitley-george-fernandes-get-padma-vibhshan/india/news/1865972.html. 
  3. "Padma Vibhushan for Jaitley, Sushma, Fernandes; Bhushan for Parrikar" (in en). https://www.dailypioneer.com/2020/india/padma-vibhushan-for-jaitley--sushma--fernandes--bhushan-for-parrikar.html. 
  4. "उद्योग एवं व्यापार क्षेत्र के 11 दिग्गजों को पद्मश्री" (in hi). https://khabartak.com/awards/trade-business-awards/. 
  5. "आनंद महिंद्रा, वेणु श्रीनिवासन सहित इन 11 दिग्गज कारोबारियों को मिला सम्मान" (in hi). https://www.indiatv.in/paisa/business-2020-padma-awards-11-industrialist-including-anand-mahindra-and-venu-srinivasan-686286. 
  6. "आनंद महिंद्रा और वेणु श्रीनिवासन समेत 11 कारोबारियों को पद्म पुरस्कार" (in hi). Archived from the original on 28 ஜனவரி 2020. https://web.archive.org/web/20200128154555/https://money.bhaskar.com/news/MON-INDU-COMP-anand-mahindra-venu-srinivasan-to-be-honoured-with-padma-bhushan-naukricom-founder-to-get-padma-shri-126610367.html. 
  7. "Meet some of Karnataka's Padma awardees who span diverse fields". Deccan Herald (ஆங்கிலம்). 2020-01-26. 2020-04-15 அன்று பார்க்கப்பட்டது.
  8. "Tally dreams big: India's top accounting software is all set to expand into retail". Moneycontrol. 2020-04-15 அன்று பார்க்கப்பட்டது.
  9. "Nasscom confers lifetime award on Tally's Goenka". The New Indian Express. 2020-04-15 அன்று பார்க்கப்பட்டது.
  10. "Tally Solutions Bharat Goenka conferred CSI Honorary Fellowship Award 2014". DATAQUEST (ஆங்கிலம்). 2014-12-17. 2020-04-15 அன்று பார்க்கப்பட்டது.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரத்_கோயங்கா&oldid=3360312" இருந்து மீள்விக்கப்பட்டது