பாரதி (ஆராய்ச்சி நிலையம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அண்டார்ட்டிகா இட அமைவு வரைபடம்
பாரதி
ஆள்கூறுகள்: 69°24′29″S 76°11′14″E / 69.408030°S 76.187361°E / -69.408030; 76.187361ஆள்கூறுகள்: 69°24′29″S 76°11′14″E / 69.408030°S 76.187361°E / -69.408030; 76.187361
நாடு இந்தியா
அண்டார்க்டிக்காலார்செமான் குன்றுகள்
பிர்ட்சு வளைகுடா
நிர்வாகம்தேசிய அண்டார்ட்டிகா மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சி மையம்
நிறுவல்மார்ச்சு 18, 2012 (2012-03-18)
மக்கள்தொகை
 • மொத்தம்
  • 47
  • summer up to: 72
வகைஆண்டு முழுவதும்
காலம்ஆண்டுக்கு ஒரு முறை
நிலைசெயல்படு நிலை
இணையதளம்National Centre for Antarctic and Ocean Research

பாரதி (ஆராய்ச்சி நிலையம்) (Bharati - research station) என்பது அண்டார்டிக்காவில் அமைந்த இந்தியாவிற்கான ஆராய்ச்சி நிலையம் ஆகும். இது, இந்தியாவின் மூன்றாவது அண்டார்டிகா ஆராய்ச்சி மையமும் நன்கு இயங்கிக் கொண்டிருக்கும் இரு இந்திய ஆராய்ச்சி நிலையங்களில் ஒன்றுமாகும். மேலும், இந்த மையமானது, மைத்ரி நிலையத்தோடு இணைந்து செயல்படுகிறது. இந்தியாவின் முதல் ஆய்வுத் தளமான தக்ஷின் கங்கோத்ரி, இத்தளத்திற்கு விநியோகத் தளமாக பயன்படுத்தப்படுகிறது. லாஸ்மேன் ஹில்ஸ் அருகே 69 ° தெ, 76 ° கி பகுதியில் இவ்வாய்வுக் கட்டிடத்தை இந்தியா நிர்மாணித்துள்ளது. இந்த ஆய்வு நிலையம் மார்ச்சு 18, 2012 இல் இருந்து செயல்பட்டு வருகிறது, இருப்பினும், அது இன்னும் சோதனை அடிப்படையிலேயே இயங்கிக்கொண்டிருக்கிறது; இது முறையான செயல்பாட்டிற்காக காத்திருக்கிறது.[1][2]

இந்த ஆய்வு நிலையம் நிறுவப்பட்டதிலிருந்து, அண்டார்டிக் வட்டத்திற்குள் பல ஆராய்ச்சி நிலையங்களைக் கொண்டுள்ள ஒன்பது நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகிவிட்டது. பாரதியின் ஆராய்ச்சி கடல் சார்ந்த ஆய்வுகள் மற்றும் கண்டத்தின் உடைவுகள் பற்றிய நிகழ்வுகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளது. இந்திய துணைக் கண்டத்தின் புவியியல் வரலாற்றின் தற்போதைய நிலையை மேம்படுத்தவும் இது உதவுகிறது. செய்தி ஊடகங்கள் இந்நிலையத்தின் பெயரை "பார்தி", "பாரதி" என வெவ்வேறு ஒலிப்பில் குறிப்பிடுகின்றன. [3] [4][5][6]

வசதிகள்[தொகு]

இங்கு அமைக்கப்பட்ட திட்டப்பணியானது, இந்தியாவின் மின்னணுவியல் கூட்டு நிறுவனக் கழகத்தால் ரூபாய் 50 கோடி (500 மில்லியன்) ஒப்பந்த மதிப்பிற்கு தேசிய தொலைதூர உணர்திறன் மையத்தால் (NRSC) நிறுவப்பட்டது. அதி-விரைவு செயற்கைக்கோளில் இருந்து வரக்கூடிய ஒளிக்கற்றைகளைச் சாியான நேரத்திற்குப் பாரதி நிலையத்திலிருந்து பெற்று ஐதராபாத் தேசிய தொலைதூர உணர்திறன் மையத்திற்கு (NRSC) அனுப்பப்படுகிறது. அங்கு தரவுகளானது செயலாக்கம் பெற்று படங்களாக்கப்படுகிறது. 2007 ஆம் ஆண்டில், இந்தியாவின் மின்னணுவியல் கூட்டு நிறுவனக் கழகத்தின் தகவல் தொடர்பானது மைத்ரி நிலையத்தோடு இணைந்துள்ளது. இது அண்டார்டிக்கா மற்றும் NCAOR இல் இரண்டாவது இந்திய ஆராய்ச்சி நிலையம் ஆகும். மற்றவர்களுடன் இணைந்து, இந்திய விஞ்ஞானிகள் பாரதி நிலையத்தில் நிலவியல் மற்றும் புவியியல் கட்டமைப்புகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்கின்றனர்.[7]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]