பாரதி பாஸ்கர்
தோற்றம்
பாரதி பாஸ்கர் என்பவர் தமிழ்ப் பேச்சாளர். சன் தொலைக்காட்சி நடத்தும் பட்டிமன்ற நிகழ்ச்சியில் பிரபலமானவர். 'வாங்க பேசலாம்' என்னும் சன் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.[1][2]
படிப்பும் பணியும்
[தொகு]அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரியில் வேதிப்பொறிஞர் பட்டமும், அண்ணா பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மை முதுகலைப் பட்டமும் பெற்றார். சிட்டி வங்கியில் துணைத் தலைவராகப் பணியாற்றுகிறார்.
எழுத்துப் படைப்புகள்
[தொகு]கல்கியில் சிறுகதைகள், தினமணியில் கட்டுரைகள், அவள் விகடனில் 'நீ நதி போல ஓடிக்கொண்டிரு' என்ற தொடர்கட்டுரை ஆகியவற்றை எழுதியுள்ளார். சிறகை விரி, பற, அப்பா என்னும் வில்லன் போன்ற நூல்களை எழுதியுள்ளார்.[3]
விருதுகள்
[தொகு]- 2021-கம்பர் விருது[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bharathi Baskar". veethi.com. Retrieved 2025-08-31.
- ↑ GsengottaiyanGurusamy (2012-05-18), Bharathi Bhaskar=Nee Nathi Pole Odikondiru=15b Velampalayam Arivu thirukoil=02, retrieved 2025-08-31
- ↑ "Amazon.in". www.amazon.in (in Indian English). Retrieved 2025-08-31.
- ↑ "நாஞ்சில் சம்பத், சுகி சிவம், பாரதி பாஸ்கர்: தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள் அறிவிப்பு". Hindu Tamil Thisai. 2022-01-26. Retrieved 2025-07-13.