பாய்லேண்டு - சிம்சு ஆக்சிசனேற்றம்
பாய்லேண்டு – சிம்சு ஆக்சிசனேற்றம் ( Boyland–Sims oxidation ) என்பது அனிலின் கார பொட்டாசியம் பெர்சல்பேட்டு டன் ஈடுபடும் வேதி வினையைக் குறிக்கிறது. இவ்வினையின் முடிவில் நீராற்பகுப்பு நடைபெற்று ஆர்த்தோ – ஐதராக்சில் அனிலின்கள் உருவாகின்றன.

இவ்வினையில் பெரும்பாலும் ஆர்த்தோ மாற்றியன்களே உருவாகின்றன. சில குறிப்பிட்ட அனிலின்கள் மட்டும் இவ்வினையில் பாரா – சல்பேட்டு மாற்றியன்களைத் தருகின்றன.
வழிமுறை
[தொகு]பாய்லேண்டு – சிம்சு ஆக்சிசனேற்ற வினையில் ஒர் இடைநிலை சேர்மம் அரைல் ஐதராக்சிலமைன் ஆர்த்தோ சல்பேட்டு (2). உருவாகின்றது என்பதை பெர்மான் நிருபித்தார். பின்னர் இந்த சுவிட்டர் அயனி இடைநிலைச் சேர்மம் மறுசீராக்கல் மூலம் ஆர்த்தோ மற்றும் பாரா அரைல் சல்பேட்டுகள் தோன்றுகின்றன. (3a மற்றும் 3b)

மேற்கோள்கள்
[தொகு]- ^ Boyland, E. et al. (1953). "729. The preparation of o-aminophenyl sulphates". J. Chem. Soc.: 3623. doi:10.1039/jr9530003623.
- ^ Boyland, E.; Sims, P. (1954). "The oxidation of some aromatic amines with persulphate". J. Chem. Soc.: 980. doi:10.1039/jr9540000980.
- ^ Behrman, E. J. (1988). "The Persulfate Oxidation of Phenols and Arylamines (The Elbs and the Boyland-Sims Oxidations)". Org. React. 35: 421–511. doi:10.1002/0471264180.or035.02. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0471264180.
- ^ Boyland, E.; Sims, P.; Williams, D. C. (1956). "The oxidation of tryptophan and some related compounds with persulphate". Biochem. J. 62 (4): 546–50. பப்மெட்:13315210.
- ^ Behrman, E. J. (1992). "The ortho-para ratio and the intermediate in the persulfate oxidation of aromatic amines (the Boyland-Sims oxidation)". J. Org. Chem. 57 (8): 2266. doi:10.1021/jo00034a016.
E. J. Behrman, On the Mechanism of the Boyland-Sims Oxidation. Progress in reaction Kinetics and Mechanism, 39, 308-310(2014).