பாயின்ட் பிரேக்
பாயின்ட் பிரேக் | |
---|---|
போஸ்டர் | |
இயக்கம் | கேத்தரின் பிகலோ |
தயாரிப்பு | ஜேம்ஸ் கேமரூன் பீட்டர் ஆப்ரஹாம் ராபர்ட் எல். லேவி |
கதை | பீட்டர் இழிப்ப் |
இசை | மார்க் இஷாம் |
நடிப்பு | கேயானு ரீவ்ஸ் பேட்ரிக் ஸ்வேஜு லொறி பெட் |
வெளியீடு | சூலை 12, 1991 |
ஓட்டம் | 123 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $24 மில்லியன் |
மொத்த வருவாய் | $83,531,958 |
பாயின்ட் பிரேக் (Point Break) திரைப்படம் கேத்தரின் பிகலோ இயக்கத்தில் கேயானு ரீவ்ஸ்,பேட்ரிக் ஸ்வேஜு,லொறி பெட்டி மற்றும் கேரி புசி ஆகியோரின் நடிப்பில் 1991ம் ஆண்டு வெளிவந்த அதிரடி திரைப்படமாகும். இத்திரைப்படம் வங்கி கொள்ளையைச் செய்யும் கடல் சறுக்கு சாகசம் செய்கிற கும்பலைப் பற்றியதாகும். இத்திரைப்படம் பெரும்பாலும் நல்ல விமர்சனங்களைப் பெற்றதுடன் வசூல்ரீதியாகவும் வெற்றி பெற்றது.மேலும் இப்படம் கல்ட் அந்தஸ்தையும் பெற்றது.இத்திரைப்படம் கேயானு ரீவ்ஸ் கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படமாகும்.
கதைக்கரு
[தொகு]ஜானி உதாஹ்(கேயானு ரீவ்ஸ்) புதியதாக நியமிக்கப்படும் FBI ஏஜென்ட் ஆவார்.அவர் முன்னாள் ஜனாதிபதிகளின் முகமூடிகளை அணிந்த கும்பல்(ரோனல்ட் ரீகன்,ரிச்சர்ட் நிக்சன்,லிண்டன் ஜோத்ன்சொன் மற்றும் ஜிம்மி கார்ட்டர் ஆகியோரின் உருவ முகமூடிகள் அக்கும்பல் உறுப்பினர்களால் அணிந்துகொள்ளப்படுகின்றன) நடத்தும் வங்கி கொள்ளைகளைப் பற்றி விசாரணை செய்யும் ஆங்கேலோ பாபஸ் என்பவருக்கு உதவியாளராக நியமிக்கப்படுகிறார்.
ஆங்கேலோ பாபஸ் அக்கொள்ளையர்கள் கடல் சறுக்கு செய்யும் மனிதர்களாக இருக்கலாம் என குறிப்பிடுகிறார்.அவர்களை கண்டறிய உதாஹ் கடல் சறுக்கு செய்யும் கும்பல்களுள் இனைய முற்படுகிறார்.அவர் கடல் சறுக்கு செய்யும் டைலர் ஆன் இன்டிகாட்(அநாதை பெண்) எனும் பெண்ணிடம் அதைக் கற்றுக்கொள்ள அணுகுகிறார்.அங்குள்ள கடல் சறுக்கு செய்யும் கும்பலின் தலைவரான் போதியுடன் நட்பை வளர்த்துகொள்கிறார்.அவர்கள் உதாஹை முன்னாள் கல்லூரியின் கால்பந்தாட்ட வீரர் எனக் கண்டுகொள்கின்றனர்.அக்கும்பல் சாகசம் செய்வதே லட்சியம் என போதி உதாஹிடம் விளக்குகிறார்.
இந்த குறிப்பைக் கொண்டு உதாஹ் கடல் சறுக்கு செய்யும் மற்றொரு கும்பலைக் குற்றவாளிகள் என கருதுகிறார்.அவர்களைக் கைது செய்யும் போது அவர்கள் போதை வஸ்துக்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிகிறது.உதாஹின் யுகம் தவறாகிபோகிறது.
போதியின் குழுவினர் கடல் சறுக்கு செய்யும் போது அவர்கள்தான் குற்றவாளிகள் என உதாஹ் அறிந்துகொள்கிறார்.அவர்களின் அடுத்த கொள்ளையின் போது உதாஹ் போதியை(ரீகன் உருவ முகமூடி அணிந்திருக்கிறார்) துரத்துகிறார்.ஒரு சறுக்கலின் போது உதாஹின் கால் உடைப்படுகிறது.அவருக்கு போதியை சுட வாய்ப்பிருந்தும் அதை சுட மறுத்துவிடுகிறார்.
பின் போதி உதாஹை ஆகாயத் தாவலுக்கு அழைத்து செல்கிறார்.அதற்குப்பின் டைலர் போதியால் பிடித்து வைக்கப்பட்டிருப்பது உதாஹிற்கு தெரிகிறது.கோடையின் இறுதி கொள்ளையின்போது உதவினால் டைலரை விடுவிப்பதாக போதி ஒப்பந்தமிடுகிறார்.இறுதிக்கொள்ளையின் போது க்ரோமெட் பகுதி நேர காவலர் ஒருவரால் கொல்லப்படுகிறார்.போதி அவரைக் கொன்றுவிட்டு உதாஹை புறந்தள்ளிவிட்டு வெளியேறுகிறார்.
தலைமை அதிகாரியை எதிர்த்து ஜானியும்,பாபஸும் போதியின் குழுவினர் மெக்ஸிகோ(டைலர் அங்குதான் சிறை வைக்கப்பட்டுள்ளார்) செல்வதற்கான விமானத் தளத்திற்கு விரைகின்றனர்.துப்பாக்கி சூட்டில் ஆங்கேலோ மற்றும் நதெனியெல் கொல்லப்படுகிறார்கள்.ரோச்சி படுகாயமடைகிறார்.போதி ஜானியை துப்பாக்கி முனையில் விமானம் ஏறுமாறு பணிக்கிறார்.போதியும்,ரோச்சியும் பாராசூடுகளின் உதவியுடன் விமானத்திலிருந்து குதிக்கின்றனர்.வேறு பாராசூடுகள் இல்லாததால் ஜானி விமானத்திலிருந்து குதித்து போதியை பற்றுகிறார்.பாராசூட்டை திறக்க போதி மறுத்துவிடுவதால் ஜானி அதை தரையை நெருங்கும் சமயத்தில் திறக்கிறார்.இதனால் அவரின் கால் மணிக்கட்டு மீண்டும் உடைகிறது.போதி டைலரை ஜானியிடம் ஒப்படைக்கிறார்.பின்பு தம் மெக்ஸிகோ நண்பருடன் தப்பி செல்கிறார்.
ஒன்பது மாதங்களுக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் உள்ள பெல்ஸ் கடற்கரையில் போதியை சந்திக்கிறார்.போதி 50 ஆண்டு புயல் பற்றி குறிப்பிடுகிறார்.அவ்விருவரின் சண்டைக்குப்பின் ஜானி சமாளித்ததுடன் அவரைத் தம் கைவிலங்குடன் பிணைக்கிறார்.போதி தம் வாழ்நாள் விருப்பமான 50 ஆண்டு புயல் சறுக்கில் செல்ல அனுமதிக்குமாறு கேட்கிறார்.போதி இறந்துவிடுவார் என தெரிந்தும் ஜானி அவரை விடுவிக்கிறார்.போதி தம் முடிவைத் தேடி செல்கிறார்.ஜானி தம் பணியை விட்டுவிடுவதனை குறிக்குமாறு தம் F.B.I சின்னத்தை பெருங்கடலில் எறிகிறார்.
கதாபாத்திரங்கள்
[தொகு]- ஜானி உதாஹ் ஆக கேயானு ரீவ்ஸ்
- போதி ஆக பேட்ரிக் ஸ்வேஜு
- டைலர் ஆன் இன்டிகாட் ஆக லொறி பெட்டி
- ஆங்கேலோ பாபஸ் ஆக கேரி புசி
தயாரிப்பு
[தொகு]இப்படம் டைட்டானிக் புகழ் ஜேம்ஸ் கேமரூன்ஆல் தயாரிக்கப்பட்டது.இப்படத்தை இயக்கியிருப்பவர் அவரது மனைவியாகும்.