பாம்செப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாம்செப் (BAMCEF) என்பது அனைத்திந்திய  தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட மலைசாதியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையோர்  ஊழியர்களின் கூட்டமைப்பு ஆகும். இது ஆங்கிலக் கூட்டுச் சொல் ஆகும். [1][2]

இந்த அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை 1973 ஆம் ஆண்டில் கன்சிராம் முன்வைத்தார். தீனா பானா, டீகே காபர்டே ஆகியோருடன் கன்சிராம் இந்த அமைப்பைத் தொடங்கினார்.

வரலாறு[தொகு]

ஆறு ஆண்டுகள் இந்தியா முழுக்க சுற்றுப்பயணம் செய்து,  கடுமையான தொடக்க வேலைகள் செய்த பின்னர் 1978 இல் இந்த இயக்கத்தின் முதல் மாநாடு நடந்தது. 1978 திசம்பர் 6 இல், அதாவது பாபா சாகேபு அம்பேத்கர் நினைவு நாள் அன்று இந்த மாநாடு நிகழ்ந்தது [1][3] பிற்படுத்தப்பட்டோர் என்ற சொல்லாடலில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் பிற பிற்படுத்தப்பட்டோரும்  அடங்குவர் என்பது இவ்வமைப்பின் கொள்கைக் கருத்து ஆகும். நோக்கங்களை நிறைவேற்றவும், உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கவும், நிதியைத் திரட்டினார்கள். மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் பொறுப்பாளர்களை அமர்த்தினார்கள். [4]

குறிக்கோள்கள்[தொகு]

சமூகத்தால் பெற்றதை அந்தச் சமூகத்திற்கே திரும்பிச் செலுத்த வேண்டும். தலித் எளிய மக்களுக்கு உதவி செய்வதற்கு  தலித் அதிகாரிகளை ஊக்கப்படுத்தவேண்டும்.  அறிவு, பணம், திறமை முதலியவற்றைப் பெறுவதற்கு முயல வேண்டும். ஊழியர்களின் சங்கம் என்று இல்லாமல், படித்த எளிய ஊழியர்கள் அறிவார்ந்தவர்களாகவும், திறமைமிக்கவர்களாகவும், பொருள் படைத்தவர்களாகவும் இருக்க வேண்டும்.[5]

மேற்கோள்[தொகு]

  1. 1.0 1.1 Religion, Caste, and Politics in India. https://books.google.com/books?id=XAO3i_gS61wC&pg=PA535&lpg=PA535&dq=kanshiram+bamcef&source=bl&ots=pAKdtE7qJP&sig=3ZajISdINvAPS31j9P4gr_iNeLQ&hl=en&sa=X&ei=ghfRUs2YCY_zoATgkIDICA&ved=0CDgQ6AEwAjgK#v=onepage&q=kanshiram%20bamcef&f=false. 
  2. Jai Mulnivasi (2011). "Mulnivasi Times" (Web page (blog)). drambedkarji.blogspot.com. Mulnivasi Sangh. பார்த்த நாள் 3 April 2012.
  3. "B.R.Ambedkar" (Web page). mapsofindia.com. Mapsofindia.com (25 January 2011). பார்த்த நாள் 3 April 2012.
  4. Franco, Macwan & Ramanathan 2004, p. 52
  5. Jaffrelot 2003, p. 392
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாம்செப்&oldid=2418481" இருந்து மீள்விக்கப்பட்டது