உள்ளடக்கத்துக்குச் செல்

பாபா மோகன் ராமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாபா மோகன் ராமா
காலி கோலி குகையில் நீலக் குதிரையில் காட்சி தரும் தெய்வம்
வகைவைணவம்
இடம்காலி கோலி
விழாக்கள்தோஜ் மேளா

பாபா மோகன் ராமா[1] ஒரு இந்து நாட்டுப்புறத் தெய்வம் ஆவார். தனது பக்தர்களால் துவாபர யுகத்தில் தோன்றிய கிருஷ்ணரின் அவதாரமாக நம்பப்படுகிறார்.[2]

உருவப்படம்

[தொகு]

இவரது உருவப்படம் பகுதிவாரியாக மாறுபடுகிறது. ஆனால், இவர் தனது தலையைச்சுற்றி மயிலிறகுடன் கூடிய தங்க வளையத்தை தனது நீண்ட கூந்தலை கட்டும் விதத்தில் அணிந்திருந்ததாக கூறப்படுகிறது. இவரது முகம் கிருஷ்ணரைப் பிரதிபலிப்பது போல நிலவின் ஒளியுடன் விளங்கியதாகவும், மேலும் இவர் பவளம் மற்றும் ருத்ராட்ச மாலையை அணிந்திருந்ததாகவும் நம்பப்படுகிறது. சேஷாவின் அவதாரமாக நம்பப்படும் நீலக்குதிரையில் ஏறியபடி காட்சி தருகிறார். சாதாரண பிராமணரைப் போன்ற உடையில் தோன்றும் பாபா மோகன் ராமா, மரத்தால் ஆன காலணிகளை அணிந்திருப்பதாகவும் பிரம்மலோகத்தில் இருந்து இவர் பெற்ற சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதாகவும் காட்சிப்படுத்தப்படுகிறார்.[3]

பெயர் விளக்கம்

[தொகு]

இவரது பெயரான பாபா ராமா மோகன் என்பது சிவன், கிருஷ்ணன் மற்றும் இராமனின் பெயர்களின் கூட்டாக உருவாக்கப்பட்டுள்ளது. முப்பெரும் கடவுளர்களின் அம்சமாக இவரது பக்தர்களால் வணங்கப்படுகிறார். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முப்பெருந் தொழிலை மேற்கொள்ளும் கடவுளாகவும் நம்பப்படுகிறார். இவருக்கு அதிசயிக்கத்தக்க ஆற்றல்கள் உள்ளதாகவும் இவரது தவம் உலக நன்மையை முன்னிட்டதாகவும் உள்ளது என்பது நம்பிக்கை. மேலும், இவர் குருவாக இருந்து உலக உயிர்களுக்கு மோட்சம் அடையும் வழியைக் கற்பிப்பதாகவும் கருதப்படுகிறது.பிராமண குருக்களின் வழித்தோன்றலாக இவர் கருதப்படுகிறார். [2]

வழிபாடு

[தொகு]

பாபா மோகன் ராமாவின் குகை பிவாடியில் உள்ள காளி கோலி மலையில் உள்ளது, அங்கு அவரது அகண்ட ஜோதி என்னும் எப்போதும் எரியும் நெருப்பு உள்ளது.தோஜ் மற்றும் செமை தோஜ் எனப்படும் ஆறு மாத திருவிழா காலங்களில் பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள். பக்தர்கள் அவருடைய அகண்ட ஜோதிக்கு நெய்யைக் காணிக்கையாக வழங்குகிறார்கள், இது அவர்களின் பிரச்சனைகளை நீக்குவதாக நம்பப்படுகிறது. புராணத்தின் படி, இந்த ஆலயம் அற்புதங்கள் மற்றும் தெய்வீக சக்திகளால் சூழப்பட்டுள்ளது. கோயில் தரையைத் துடைப்பது, ஏழைகளுக்கு உணவு வழங்குவது, பறவை தீவனங்களுக்கு தண்ணீர் வழங்குவது மற்றும் விலங்குகளுக்கு, குறிப்பாக பசுக்களுக்கு உணவளிப்பது போன்ற எந்தவொரு சேவையும் மக்களுக்கு பயனளிக்கும். கோவிலை சுற்றிலும் மரங்கள் மற்றும் பல்வேறு வகையான பறவைகள் உள்ளன. அவரது முதல் பக்தரான நந்துஜி[3][4][5] வாழ்ந்த மிலாக்பூர் கிராமத்தில் அவரது பெயரில் ஒரு கோயிலைக் கட்டும்படி பாபா மோகன் ராமா தனது பக்தர்களுக்குக் கட்டளையிட்டதாகக் கூறப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Krishna, Bal (1999). Dooj Vrat Baba Mohan Ram. Alwar: Village Milakhpur. pp. 1to100.
  2. 2.0 2.1 Tyagi, Manu (2018). Shani Mahima Granth. Delhi: Rama Publication. p. 67. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-903707-9-0.
  3. 3.0 3.1 Bhagat Ji, Guru Deshraj (2016). Baba Mohan Ram Katha. Delhi: Baba Mohan Ram. pp. 1–100. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8-5119-3913-2.
  4. "Bisrakh residents keen to reinstall Ravana idol". Times of India. TNN. 11 August 2016. https://timesofindia.indiatimes.com/city/noida/Bisrakh-residents-keen-to-reinstall-Ravana-idol/articleshow/53643702.cms. பார்த்த நாள்: 10 January 2019. 
  5. "Ram makes it in Bisrakh temple, amid heavy police guard". Times of India. 12 August 2016. https://timesofindia.indiatimes.com/city/noida/Ram-makes-it-in-Bisrakh-temple-amid-heavy-police-guard/articleshow/53660110.cms. பார்த்த நாள்: 10 January 2019. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபா_மோகன்_ராமா&oldid=3839854" இலிருந்து மீள்விக்கப்பட்டது