பாபவர் காலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாபவர் காலன் (Bapawar Kalan) என்பது இந்திய மாநிலமான இராசத்தானின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரமாகும். கோட்டா மாவட்டத் தலைமையகத்திலிருந்து தெற்கே 37 கிலோமீட்டர் தொலைவில் இந்நகரம் அமைந்துள்ளது. ஓர் இரயில் நிலையம், மருத்துவமனை, பள்ளிகள், சந்தைகள் மற்றும் போக்குவரத்துக்கான சாலைகள் ஆகியவை பாபவர் காலன் நகரத்தில் உள்ளன. இந்நகரத்தின் மக்கள் முதன்மையாக விவசாயதை நம்பி விவசாயம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.[1][2] இக்கிராமத்தின் மொத்த புவியியல் பரப்பளவு 1374.96 எக்டேராகும். சங்கோட்டு நகரம் அனைத்து முக்கிய பொருளாதார நடவடிக்கைகளுக்கும் பாபவர் காலனுக்கு அருகிலுள்ள நகரமாகும். சங்கோட்டு நகரம் தோராயமாக 16 கிமீ தொலைவில் உள்ளது.

கல்வியறிவு[தொகு]

பாபவர் காலனில் வாழும் மக்களின் கல்வியறிவு விகிதங்களில் பாலின இடைவெளி உள்ளது. ஆண்களின் கல்வியறிவு 87.21% ஆக உள்ளது, பெண்களின் கல்வியறிவு 61.10% ஆக உள்ளது.[1]

நகரம் கல்வியறிவு விகிதம் (2011) ஆண்களின் கல்வியறிவு பெண்களின் கல்வியறிவு
பாபவர் காலன் 74.69% 87.21% 61.10%

மக்கள் தொகை[தொகு]

2011 ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பாபவர் காலன் நகரத்தில் 3,729 ஆண்களும், 3,441 பெண்களும் என மொத்த மக்கள் தொகை 7,170 ஆக இருந்தது. இங்கு மொத்தம் 1,416 குடும்பங்கள் வசிக்கின்றன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Bapawar Kalan Village Population - Sangod - Kota, Rajasthan". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2023-03-06.
  2. "BAPAWAR KALAN Village BAPAWAR KALA Panchayat SANGOD Block, Kota, Rajasthan India BrandBharat.com". www.brandbharat.com. பார்க்கப்பட்ட நாள் 2023-03-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபவர்_காலன்&oldid=3847713" இலிருந்து மீள்விக்கப்பட்டது