உள்ளடக்கத்துக்குச் செல்

பாத்மா பேகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாத்மா பேகம்
150hpx
பாத்மா பேகம்
பிறப்பு1892
இந்தியா
இறப்பு1983 (அகவை 90–91)
இந்தியா
பணிநடிகை, இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர்
வாழ்க்கைத்
துணை
மூன்றாம் நவாப் சிதி இப்ராகிம் முஹம்மது யாகுத் கான் (கருதப்படுகிறது)
பிள்ளைகள்3, நடிகை சுபைதா பேகம், சுல்தானா, ஷேஷாதி
உறவினர்கள்நடிகை இரியா பிள்ளை (பெரிய பேத்தி)

பாத்மா பேகம் (Fatma Begum) (1892-1983) இந்தியாவைச் சேர்ந்த, நடிகையும், இயக்குனரும், திரைக்கதை எழுத்தாளரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் பெரும்பாலும் இந்தியத் திரையுலகின் முதல் பெண் திரைப்பட இயக்குனராக கருதப்படுகிறார். [1] நான்கு ஆண்டுகளுக்குள், இவர் பல படங்களுக்கு கதைகளை எழுதவும், தயாரிக்கவும், இயக்கவும் செய்தார். இவர் "பாத்மா பிலிம்ஸ்" என்ற தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். பின்னர் அது "விக்டோரியா-பாத்மா பிலிம்ஸ்" என ஆனது. மேலும் 1926 ஆம் ஆண்டில் புல்பூல்-இ-பரிஸ்தான் என்ற தனது முதல் படத்தை இயக்கினார். [2] [3] இவர் 1983இல் இறந்தார்.

குடும்பம்

[தொகு]

பாத்மா பேகம் இந்தியாவில் உருது பேசும் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தார். பிரித்தானியர்கள் காலத்தில் ஒரு சுதேச மாநிலமாக இருந்த சாச்சின் மாநிலத்தைச் சேர்ந்த மூன்றாம் நவாப் சிதி இப்ராகிம் முஹம்மது யாகுத் கான் என்பவரை மணந்தார். [4] ஆனாலும் இவர்களுக்கிடையே ஒரு திருமணம் அல்லது ஒப்பந்தம் நடந்ததாக எந்த பதிவும் இல்லை. இந்தியாவின் முதல் பேசும் படமான ஆலம் ஆரா (1931)வில் நடித்துள்ள சுபைதா பேகம், நடிகை சுல்தானா மற்றும் ஷேஷாதி என்ற மூன்று மகள்கள் இருந்தனர். [5]

தொழில்

[தொகு]

இவர் தனது நடிப்பு வாழ்க்கையை உருது நாடக மேடையில் தஒடங்கிய இவர் படங்களுக்கு மாறி, இயக்குநர் அர்தேஷீர் இரானியின் வீர் அபிமன்யு (1922) என்ற உரையாடல்கள் இல்லாத படத்தில் அறிமுகமானார். நாடகங்களிலும் திரைப்படங்களிலும் ஆண்கள் பெண்களின் வேடத்தில் தோன்றுவதே அப்போது வழக்கமாக இருந்தது. எனவே இவர் ஒரு பெரிய பெண் உச்சநட்சத்திரம் ஆனார்.

1926 ஆம் ஆண்டில், இவர் பாத்மா பிலிம்ஸை நிறுவினார். பின்னர் அது 1928 இல் விக்டோரியா-பாத்மா பிலிம்ஸ் என்று அறியப்பட்டது. இவர் கற்பனைத் திரைப்படங்களின் முன்னோடியாக இருந்தார். அங்கு இவர் ஆரம்பகால சிறப்பு விளைவுகளை ஏற்படுத்த தந்திர பப்டபிடிப்புக் காட்சிகளை பயன்படுத்தினார். இவர் "கோஹினூர் ஸ்டுடியோஸ்" மற்றும் "இம்பீரியல் ஸ்டுடியோஸ்: ஆகியவற்றிலும் ஒரு நடிகையாக இருந்தார். அதே நேரத்தில் பாத்மா பிலிம்ஸில் தனது சொந்த படங்களுக்கு கதைகளை எழுதுவதும், இயக்குவதும், தயாரிப்பதும், நடிப்பதையும் கொண்டிருந்தார்.

பேகம் தனது 1926 திரைப்படமான புல்பூல்-இ-பாரிஸ்தான் மூலம் இந்தியத் திரைப்படத்துறையின் முதல் பெண் இயக்குநரானார். [6] படத்தின் அறியப்பட்ட அச்சிட்டுகள் எதுவும் தற்போது இல்லை என்றாலும், அதிக செலவில் தயாரித்து பல சிறப்பு விளைவுகளைக் கொண்ட ஒரு கற்பனை படம் என்று விவரிக்கப்பட்டுள்ளது. இது உண்மை என்றால், ஜார்ஜ் மெலீஸ் போன்ற கற்பனை சினிமாவின் ஆரம்ப முன்னோடிகளில் இந்த படம் இவரை வைக்கிறது. பாத்மா தனது சொந்த படைப்பில் தொடர்ந்து தயாரித்து வந்தாலும், கோஹினூர் ஸ்டுடியோஸ் மற்றும் இம்பீரியல் ஸ்டுடியோஸிலும் 1938 ஆம் ஆண்டில் தனது கடைசி படமான துனியா க்யா ஹை வரை பணியாற்றினார்.

இவர் வேறு பல படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக இவர் இயக்கிய காட்டெஸ் ஆஃப் லக் என்றத் திரைப்படம் 1929இல் வெளிவந்தது.

மரபு

[தொகு]

இவர் 1983 இல் தனது 91 வயதில் இறந்தார். இவரது மரபு இவரது மகள் சுபைதாவால் மேற்கொள்ளப்பட்டது. அவர் ஒரு ஊமைத் திரைப்படங்களின் நட்சத்திரம் என்பதைத்தவிர தவிர, இந்தியாவின் முதல் பேசும்படமான ஆலம் ஆராவில் நடித்திருந்தார் . [7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Rajadhyaksha, Ashish, ed. (1999). Encyclopedia of Indian Cinema (2 ed.). New York: Routledge. pp. 95. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1579581463.
  2. "Bollywood's unforgettable women - Times of India". The Times of India. Archived from the original on 2 February 2017. பார்க்கப்பட்ட நாள் 2016-03-31.
  3. Pandya, Sonal. "Fatma Begum, Jaddanbai: The earliest female filmmakers of Indian cinema". Cinestaan. Archived from the original on 26 February 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-02-26.
  4. "Sachin Princely State (9 gun salute)". Archived from the original on 23 April 2017. பார்க்கப்பட்ட நாள் 25 June 2014.
  5. "Archived copy". Archived from the original on 22 August 2019. பார்க்கப்பட்ட நாள் 22 August 2019.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  6. "100 Years of Indian Cinema: The first women directors". IBNLive. Archived from the original on 12 March 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-03-04.
  7. Rajadhyaksha, Ashish, ed. (1999). Encyclopedia of Indian Cinema (2 ed.). New York: Routledge. pp. 95. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1579581463.Rajadhyaksha, Ashish; Willemen, Paul, eds. (1999). Encyclopedia of Indian Cinema (2 ed.). New York: Routledge. p. 95. ISBN 1579581463.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாத்மா_பேகம்&oldid=3889346" இலிருந்து மீள்விக்கப்பட்டது