பாதுக் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பதூக்
குறு வட்டு அட்டைப் படம், ஜப்பானில் வெளியானது
இயக்கம்மசித் மசிதி
நடிப்புமுகம்மது காஸாபி, மெஹ்ரூலா மரஸிஹி, நுராஹ்மத் பராஹோலி, ஹூசைன் ஹாய்ஜார்
ஓட்டம்90 நிமிடங்கள்
மொழிபாரசீக மொழி

பாதுக் (பாரசீக மொழி: بدوک ‎) எனும் ஈரானியத் திரைப்படம் 1992 ஆம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படம் ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி இயக்கியது. பாதுக் எனும் பாரசீக மொழிச் சொல், சட்ட விரோத பொருள்களைக் எல்லை தாண்டி நடந்தே கொண்டு செல்லும் குழந்தைகளைக் குறிக்கிறது. இத்திரைப்படமானது பலுசிஸ்தான் பகுதியில் படமாக்கப்பட்டது. இயக்குனர் மஜித் மஜிதி அவரது தொடக்ககால ஆவணப்படங்களுக்குப் பின் இயக்கிய முதல் திரைப்படம் இதுவாகும்.

கதை[தொகு]

ஜாபர் மற்றும் அவனது சகோதரி ஜமால் இருவரும் பெற்றோரின் மறைவுக்குப் பின் கடத்தப்பட்டு அடிமைகளாக விற்கப்படுகின்றனர். ஜமாலை சவுதி இளவரசருடன் அனுப்பி விடுகிறார்கள். ஜாபர் பாக்கிஸ்தான் மற்றும் ஈரான் இடையே சட்டவிரோதமாக பொருட்களைக் கடத்திச் செல்லும் வேலைக்கு அனுப்பப்படுகிறான். ஜாபர் அவனுடைய நண்பன் நூர்தீநுடன் இணைந்து அவனது சகோதரியை மீட்கிறான்.

நடிகர்கள்[தொகு]

  • முகம்மது காஸாபி (Mohammad Kasebi)
  • மெஹ்ரூலா மரஸிஹி (Mehrolah Mararzehi)
  • நுராஹ்மத் பராஹோலி (Norahmad Barahoi)
  • ஹூசைன் ஹாய்ஜார் (Hossein Haijar)

வெளியீடு[தொகு]

இத்திரைப்படம் 1992 ஆம் ஆண்டு ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற திரைப்படவிழாவில் திரையிடப்பட்டது. இத்திரைப்படத்தின் தணிக்கை தொடர்பாக மஜித் மஜிதி பல்வேறு சிக்கல்களைச் சந்தித்தார். மேலும் இத்திரைப்படம் கான்ஸ் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது.

விருதுகள்[தொகு]

  • ஃபாஜர் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படம் விருது ( Best New Film, 10th Annual Fajr Film Festival)
  • ஃபாஜர் திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதை விருது (Best Screen Play, 10th Annual Fajr Film Festival)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாதுக்_(திரைப்படம்)&oldid=2234143" இருந்து மீள்விக்கப்பட்டது