பாண்டியாட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாண்டியாட்டம் அல்லது நொண்டியாட்டம் என்றும் அழைக்கப்படும் பாண்டி, பாரம்பரியமாக தெற்கு இந்தியாவின் கிராமப்புற பகுதிகளிலும் ( தமிழ்நாடு. ஆந்திரா, கர்நாடகா போன்றவை ), இலங்கை மற்றும் புலம்பெயர்ந்த இந்தியர்களைக் கொண்ட பிற நாடுகளிலும் பாரம்பரியமாக விளையாடப்படும் ஒரு பிராந்திய குதித்து விளையாடும் விளையாட்டுகளில் ஒன்றாகும். [1][2] இந்த விளையாட்டு முற்றிலும் பொழுதுபோக்காக மட்டுமே விளையாடப்படுகிறது ஏனெனில் இதற்கு பொதுவான விதிகளோ அல்லது ஒழுங்குமுறைகளோ கிடையாது.[3] இது ஆந்திரப் பிரதேசத்தில் தொக்குடு பில்லா அல்லது தங்கிடி பில்லா என்றும் கர்நாடகாவில் குண்டே பில்லே என்றும் அழைக்கப்படுகிறது .[4][5]

வரலாறு[தொகு]

நாட்டுப்புற விளையாட்டுகளின் ஒரு பகுதியாக இருப்பதால், விளையாட்டின் தோற்றத்தைச் சுட்டிக்காட்டும் சரியான காலக்கெடுவை நிறுவ முடியாது . இருப்பினும், சில பழங்கால தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதால் , மிக ஆரம்ப நூற்றாண்டுகளிலிருந்தே இது இருப்பதாக நம்பப்படுகிறது. நொண்டியடித்து விளையாடுவதால் இதை நாம் நொண்டி எனவும் உச்சரிக்கலாம்.

விளையாட தேவையான சூழல்[தொகு]

குண்டு குழிகள் (நொண்டியடித்து விளையாடுவதால் வீரருக்கு தீங்கு விளைவிக்கும்) இல்லாத, மற்றும் பிற கடுமையான சேதங்கள் இல்லாத எந்த சமதள நிலப்பரப்பையும் களமாகப் பயன்படுத்தப்படலாம். பொதுவாக, இவ்விளையாட்டு இதமான காற்று வீசும் மாலை நேரங்களில் விளையாடப்படுகிறது, மேலும் இந்த விளையாட்டு பெரும்பாலும் வெப்பமண்டலப் பகுதியில் உள்ள இடங்களில் விளையாடப்படுவதால் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து வீரர்கள் விடுபடவே மாலை நேரங்களில் விளையாடப்படலாம். மழைக்காலத்தில் நிலப்பரப்பு ஈரமாக இருப்பதாலும் இதனால் வீரர்களுக்கு காயம் ஏற்படக்கூடும் என்பதாலும், மழைக்காலங்களில் பொதுவாக விளையாடப்படுவதில்லை. ஆனால் இந்த விளையாட்டில் ஆர்வமுள்ளவர்களுக்கு இது தடையாக இருக்காது. தேவையானதெல்லாம் ஒரு சிறிய கல் துண்டு, சமதளமான நிலப்பரப்பு மட்டுமே.

விளையாடும் முறை[தொகு]

பாண்டி விளையாட்டு (கருப்புகுறி வட்டக்கல்லை குறிக்கும்)

படத்தில் இருப்பது போல அடுத்தடுத்து ஒன்றோடொன்றாக இணைக்கப்பட்ட மூன்று கட்டங்கள், அதையடுத்து தனித்தனியாக இரண்டு இணைக்கப்பட்ட கட்டங்கள் பின்னர் ஒரு ஒற்றை கட்டம், கடைசி இரண்டு கட்டங்கள் வரையப்படும்.கட்டங்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொட்டதுபோல வரையப்பட்டுள்ளன, சிறு கல்லை கட்டத்திற்குள் போட்டு அதை கால்களாலே கட்டத்திற்கு கட்டம் தள்ளிக்கொண்டும் அதே சமயம் ஒவ்வொரு கட்டத்திற்குள்ளும் ஒரு காலை மட்டும் பயன்படுத்தி துள்ளிக்கொண்டும், குதித்துக்கொண்டும் எல்லைகளைத் தொடாமல் கடப்பவர் வெற்றியாளராக கருதப்படுவார். இறுதி வெற்றியாளராக மாற, வீரர் கடக்க வேண்டிய பல்வேறு நிலைகள் உள்ளன.

இதே விளையாட்டை முற்றிலும் கண்களை மூடிக்கொண்டே விளையாடும் வீரர்களும் உண்டு.அவர்கள் பல விளையாட்டுகளில் விளையாடி அனுபவசாலிகளாக இருப்பதால் இது சாத்தியமே.

தற்போதைய நிலை[தொகு]

இந்த விளையாட்டு முக்கியமாக ஓய்வுக்காகவும் பொழுதுபோக்காகவும் விளையாடப்படுகிறது. ஆனால் நவீன காலத்தில் குழந்தைகள் வீடியோ விளையாட்டுகள் மற்றும் கிரிக்கெட் போன்ற பிற விளையாட்டுகளில் தங்கள் ஆர்வத்தை மாற்றியுள்ளதால் இத்தகைய தெரு விளையாட்டுகள் அதன் பிரகாசத்தை இழந்து வருகிறது.[6]

இந்தியாவில் பிற மாநிலங்களில்[தொகு]

ஜயோரா, மத்தியபிரதேசம், இந்தியாவில் பாண்டி விளையாடும் பெண்குழந்தைகள்

இந்தியாவில் , இந்தி பேசும் பகுதிகளில் கித்-கித் , ஸ்டாபு , லாங்டி , அல்லது வங்காளத்தில் ஏகாத் துஹாத் அல்லது எக்கா டுக்கா , மகாராஷ்டிராவில் லாங்டிபானி , கர்நாடகாவில் குண்டே பில்லே, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தோக்குடு பில்லா என்றும் அழைக்கப்படுகிறது . இந்த விளையாட்டுகள் ஒரே மாதிரியான கொள்கைகளைக் கொண்டுள்ளன, இதில் வீரர்கள் ஒரு காலில் குதிக்க வேண்டும் மற்றும் சிறு வட்டக்கல்லை சரியான சதுரத்தில் வீச வேண்டும். இந்த விளையாட்டு நாடு முழுவதும் உள்ள குழந்தைகளால் ரசிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nondi [Pandi]". Traditional Games. பார்க்கப்பட்ட நாள் 14 August 2015.
  2. "Paandi". Samosapedia. Archived from the original on 24 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 14 August 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. HEMA VIJAY (February 17, 2014). "Games for life". The Hindu. Archived from the original on 19 பிப்ரவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 14 August 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. K. Krishna Murthy. Nāgārjunakoṇḍā: A Cultural Study. Concept Publishing Company, 1977 - Andhra Pradesh (India) - 289 pages. பக். 260. 
  5. Karnataka (India). Karnataka State Gazetteer: Mysore. Director of Print, Stationery and Publications at the Government Press, 1988. பக். 200. 
  6. "All in a game". Campus Diaries. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 14 August 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாண்டியாட்டம்&oldid=3690056" இலிருந்து மீள்விக்கப்பட்டது