பாட்டாளி வருக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாட்டாளி வருக்கம் (Proletariat;(/ˌprlɪˈtɛəriət/-இலத்தீன் proletarius "producing offspring")) என்பது பாட்டாளிகள் அதாவது உடலுழைப்பாலே பாடுபட்டு ஊதியம் பெறுவோரின் தொகுதியாகும். இந்தச் சொற்றொடர் பொதுவாக மார்க்சியம் பொதுவுடைமை போன்ற சமுதாய அரசியற் சூழ்நிலைகளில் மிகப் பரவலாக வழங்குவது.

பாட்டாளியரிற் பெரும்பான்மையான மக்கள் தொழிற்சாலைகள், அலுவலகங்கள், வேளாண்மைப் பண்ணைகளில் ஊதியத்திற்காகப் பாடுபட்டுப் பணிபுரிவதாற் "பாட்டாளிகள்" எனப்படுகின்றனர். இவர்கள் "உழைக்கும் வர்க்கம்" எனவும்படுகின்றனர்.

மார்க்சியக் கோட்பாட்டிலே பொருளாதார நோக்கிலே பாட்டாளியர் என்போரின் கண்டுகொள்ளத்தக்க ஒரே உடைமை அவர்தம் உடலுழைப்பே.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Marx, Karl (1887). "Chapter Six: The Buying and Selling of Labour-Power". In Frederick Engels (ed.). Das Kapital, Kritik der politischen Ökonomie [Capital: Critique of Political Economy]. Moscow: Progress Publishers. பார்க்கப்பட்ட நாள் 10 February 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாட்டாளி_வருக்கம்&oldid=3584425" இலிருந்து மீள்விக்கப்பட்டது