பாடகர்குழுக் கல்விமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாடகர் குழுக் கல்விமான் (choral scholar) என்பவர் தனது படிப்புச் செலவுகளுக்காக பள்ளி அல்லது பல்கலைக்கழகப் பாடகர்குழுவில் பாடிப் பணம் பெறும் மாணவர் ஆவார். இந்த நடைமுறை ஐக்கிய ராச்சியத்தில் உள்ள பேராலயங்களால் நடத்தப்படும் பள்ளி கல்லூரிகளில் புழக்கத்தில் உள்ளது.

கேம்பிரிட்ஜ் அரசர் கல்லூரி, கேம்பிரிட்ஜ் புனித ஜான் கல்லூரி, ஆக்ஸ்ஃபோர்டு புதுக் கல்லூரி போன்ற கல்லூரிகள் தங்களின் பாடகர் குழுவிற்காகப் புகழ்பெற்றவையாகும். இவ்வாறு பயிலும் மாணவர்கள் தேவாலயத்தில் நடைபெறும் ஆராதனைகளில் பாடவேண்டும். பெரும்பாலான நாட்களில் இதற்கான ஒத்திகை இருக்கும்.