பாசுபோரைல் புரோமைடு
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
வேறு பெயர்கள்
பாசுபரசு ஆக்சிபுரோமைடு
| |||
இனங்காட்டிகள் | |||
7789-59-5 | |||
ChemSpider | 23015 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 24613 | ||
| |||
பண்புகள் | |||
POBr3 | |||
வாய்ப்பாட்டு எடை | 286.69 கி/மோல் | ||
அடர்த்தி | 2.82 கி செ.மீ−3 | ||
உருகுநிலை | 56 °C (133 °F; 329 K) | ||
கொதிநிலை | 192 °C (378 °F; 465 K) | ||
தீங்குகள் | |||
ஈயூ வகைப்பாடு | C | ||
R-சொற்றொடர்கள் | R14, R34, R37 | ||
S-சொற்றொடர்கள் | S7/8, S26, S36/37/39, S43, S45 | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
பாசுபோரைல் புரோமைடு (Phosphoryl bromide) என்பது POBr3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.பாசுபரசு ஆக்சிபுரோமைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. பாசுபரசு முப்புரோமைடுடன் திரவநிலை புரோமினை மெதுவாகச் சேர்த்து அதைத் தொடர்ந்து மெதுவாக தண்ணீரைச் சேர்க்க வேண்டும். வினையில் உருவாகும் கரைசலை வெற்றிடத்தில் காய்ச்சி வடித்து பாசுபோரைல் புரோமைடு தயாரிக்கப்படுகிறது.
இவ்வினைக்கான சமன்பாடு:
பண்புகள்
[தொகு]அடர்த்தி 2.822, (சூடான நீரில்) உருகுநிலை 56° செல்சியசு, கொதிநிலை 192° (சிதைவடையும்) மதிப்புகள் கொண்ட மங்கலான ஆரஞ்சு நிறச்சாயத்தில் மெல்லிய தகடுகளாக பாசுபோரைல் புரோமைடு காணப்படுகிறது. தண்ணீரில் மெல்ல நீராற்பகுப்பு அடைந்து H3PO4 மற்றும் HBr ஆகியன உருவாகின்றன.
ஈதர், பென்சீன், குளோரோஃபார்ம், கார்பன் டைசல்பைடு, அடர் கந்தக அமிலம் ஆகியனவற்றில் கரைகிறது. இச்சேர்மம் முத்திரையிடப்பட்ட கண்ணாடி குமிழ்களில் சேமித்து வைக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Hönigschmid, Hirschbold-Wittner, Z. Anorg. Allg. Chem. 243, 355 (1940)
- ↑ Johnson, Nunn, J. Am. Chem. Soc. 63, 141 (1941); Booth, Seegmiller, Inorg. Synth. 2, 151 (1946)
- ↑ Jacob, E. Jean, Donald D. Danielson, and Svein Samdal. "An electron diffraction determination of the molecular structures of phosphoryl bromide and thiophosphoryl bromide." Journal of Molecular Structure 62 (1980): 143-155.
- ↑ Bell, I. S., P. A. Hamilton, and P. B. Davies. "Infrared Diode–Laser Spectroscopy of Phosphoryl Bromide (BrPO)." Journal of molecular spectroscopy 195.2 (1999): 340-344.
- ↑ Okuda, Tsutomu, et al. "Structural study of phosphoryl bromide by means of nuclear quadrupole resonance." Inorganic Chemistry 14.5 (1975): 1207-1209.