பாசுபீன்-போரேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Structure of Me3PBH3, ஒரு பாசுபீன்-போரேன்

பாசுபீன்-போரேன்கள் (Phosphine-boranes) என்பவை R3-nHnPBH3 என்ற பொதுவாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிமபாசுபரசு சேர்மங்களாகும். இவை கரிம பாசுபீனும் (R3-nHnPBH3) போரேனும் (BH3) வினைபுரிவதால் தோன்றும் வழிப்பெறுதிகளாகும். இவை பொதுவாக நிறமற்றதாக அல்லது வெள்ளை நிறங்கொண்ட திண்மப் பொருள்களாகும். இந்த சேர்க்கைப் பொருள்கள் காற்றில் நிலையாக இருப்பதால், இவை தாய் கரிமபாசுபீனின் பாதுகாக்கப்பட்ட வடிவத்தைக் குறிக்கின்றன.[1][2]

தயாரிப்பு[தொகு]

மூலப்பாசுபீனுடன் போரேனைக் கொடுக்கும் மூலப்பொருள்கள் வினைபுரிவதால் பாசுபீன்-போரேன்கள் உருவாகின்றன.

PR3-nHn + BH3 → R3-nHnPBH3

போரேன் கரைசல்கள் விலை உயர்ந்தவை அல்லது ஆபத்தானவை என்பதால், போரேன் பெரும்பாலும் தளத்திலேயே உருவாக்கப்படுகிறது, எ.கா: அயோடினுடன் போரோ ஐதரைடை சேர்த்து ஆக்சிசனேற்றம் செய்வதன் மூலம் போரேன் தயாரிக்கப்படுகிறது.[3]

பாசுபீனை விடுவிப்பதற்கான நிலையை பெரும்பாலும் மூன்றாம் நிலை அமீனுடன் சேர்த்து சூடாக்குவதன் மூலம் அடையப்படுகிறது:[2]

R3-nHnPBH3 + R'3N → R'3NBH3 + R3-nHnP

மேற்கோள்கள்[தொகு]

  1. Alayrac, Carole; Lakhdar, Sami; Abdellah, Ibrahim; Gaumont, Annie-Claude (2014). "Recent Advances in Synthesis of P-BH3 Compounds". Phosphorus Chemistry II. Topics in Current Chemistry. 361. பக். 1–82. doi:10.1007/128_2014_565. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-319-15511-1. 
  2. 2.0 2.1 Brunel, Jean Michel; Faure, Bruno; Maffei, Michel (1998). "Phosphane–Boranes: Synthesis, Characterization and Synthetic Applications". Coordination Chemistry Reviews 178-180: 665–698. doi:10.1016/S0010-8545(98)00072-1. https://archive.org/details/sim_coordination-chemistry-reviews_1998-12_178-180/page/665. 
  3. Mathur, M. A.; Myers, W. H.; Sisler, H. H.; Ryschkewitsch, G. E. (2007). "Methyldiphenylphosphine-Borane and Dimethylphenylphosphine-Borane". Inorganic Syntheses 15: 128–133. doi:10.1002/9780470132463.ch29. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசுபீன்-போரேன்&oldid=3520438" இலிருந்து மீள்விக்கப்பட்டது