உள்ளடக்கத்துக்குச் செல்

பாசுக்கலின் வாய்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணிதத்தில் பாசுக்கலின் வாய்பாடு அல்லது பாசுக்கலின் விதி (Pascal's rule அல்லது Pascal's formula) என்பது ஈருறுப்புக் குணகங்கள் பற்றியதொரு சேர்வியல் முற்றொருமையாகும்.

பாசுக்கலின் விதி:

(n−1k)+(n−1k−1)=(nk), (n , k இயல் எண்கள்)

இதில் (nk) ஒரு ஈருறுப்புக் குணகம்; இந்த ஈருறுப்புக் குணகமானது (1 + x)n -இன் பல்லுறுப்புக்க்கோவை விரிவிலுள்ள xk உறுப்பின் குணகமாகும். n மற்றும் k ஆகிய இரண்டின் சார்மதிப்புகளுக்கு கட்டுப்பாடு எதுவும் இல்லை.[1] ஏனெனில் n < k இருந்தால் இந்த ஈருறுப்புக்கோவையின் மதிப்பு பூச்சியமாகி, இந்நிலையிலும் பாசுக்கலின் வாய்பாடு உண்மையாகும்.

"(x+y)!x!y!=(x+yx)=(x+yy) என்ற வாய்பாடானது, இயல் எண்களில்

Nx,y=Nx−1,y+Nx,y−1,N0,y=Nx,0=1 என்ற நேரியல் இருபரிமாண வேறுபாட்டுச் சமன்பாட்டைத் தீர்க்கும்"

என்ற கூற்றாகவும் பாசுக்கலின் விதியைக் கருதலாம். இதனால் பாசுக்கலின் முக்கோணத்திலுள்ள எண்களுக்கான வாய்பாடு பற்றிய கூற்றாகவும் இவ்விதியுள்ளது.

இவ்விதியினை பல்லுறுப்புக் கெழுக்களுக்கும் பொதுமைப்படுத்தலாம்.

சேர்வியல் நிறுவல்

[தொகு]

பாசுக்கலின் விதிக்குள்ள இயல்புணர்வான சேர்வியல் பண்பினைக் கீழுள்ள எண்ணுதல் நிறுவலில் காணலாம்[2] இந்த நிறுவல் முறையில் (nk) ஆனது n உறுப்புகளைக் கொண்ட ஒரு கணத்திலிருந்து தேர்வுசெய்யப்படும் k உறுப்புகளைக் கொண்ட உட்கணங்களின் எண்ணிக்கைக்குச் சமம் என்ற கூற்றிலிருந்து பாசுக்கலின் விதி நிறுவப்படுகிறது:

நிறுவல்:

எடுத்துக்கொள்ளப்படும் கணத்தின் n உறுப்புகளில் குறிப்பிட்டதொரு உறுப்பு X எனில்,

  • X உட்பட்ட k உறுப்புகள் கொண்ட உட்கணங்களைத் தேர்வு செய்யும் வழிகள்:

X நீங்கலான மீதமுள்ள n − 1 உறுப்புகளிலிருந்து தேவையான k − 1 உறுப்புகள் தேர்வு செய்யப்பட வேண்டும். இவ்வகையான உட்கணங்களின் எண்ணிக்கை:

(n−1k−1).
  • X நீங்கலாக k உறுப்புகள் கொண்ட உட்கணங்களைத் தேர்வு செய்யும் வழிகள்:

X நீங்கலான மீதமுள்ள n − 1 உறுப்புகளிலிருந்து தேவையான k உறுப்புகள் தேர்வு செய்யப்பட வேண்டும். இவ்வகையான உட்கணங்களின் எண்ணிக்கை:

(n−1k)

இவை இரண்டிலிருந்து k உறுப்புகள் கொண்ட (X உட்பட்ட மற்றும் நீங்கலான) மொத்த உட்கணங்களின் எண்ணிக்கை:

(n−1k−1)+(n−1k).

எனவே

(nk)=(n−1k−1)+(n−1k).

இயற்கணித நிறுவல்

[தொகு]

பாசுக்கலின் விதி இயற்கணித முறையில் பின்வருமாறு நிறுவப்படுகிறது:

(n−1k)+(n−1k−1)=(n−1)!k!(n−1−k)!+(n−1)!(k−1)!(n−k)!=(n−1)![n−kk!(n−k)!+kk!(n−k)!]=(n−1)!nk!(n−k)!=n!k!(n−k)!=(nk).

பொதுமைப்படுத்தல்

[தொகு]

பாசுக்கலின் விதியைப் பல்லுறுப்புக்கெழுக்களுக்கும் பொதுமைப்படுத்தலாம்[3]. p ஏதேனுமொரு முழு எண் மற்றும் p≥2, k1,k2,k3,…,kp∈ℕ+, மேலும் n=k1+k2+k3+⋯+kp≥1 எனில், பல்லுறுப்புக்கெழுக்களுக்கான பாசுக்கலின் விதி:

(n−1k1−1,k2,k3,…,kp)+(n−1k1,k2−1,k3,…,kp)+⋯+(n−1k1,k2,k3,…,kp−1)=(nk1,k2,k3,…,kp)

இதில் (nk1,k2,k3,…,kp) ஆனது (x1+x2+⋯+xp)n விரிவிலுள்ள x1k1x2k2…xpkp உறுப்பின் கெழுவாகும்.

இவ்விதியின் இயற்கணிதமுறை நிறுவல்[3]:

p ஒரு முழு எண் மற்றும் p≥2, k1,k2,k3,…,kp∈ℕ+, மேலும் n=k1+k2+k3+⋯+kp≥1 எனில்,

(n−1k1−1,k2,k3,…,kp)+(n−1k1,k2−1,k3,…,kp)+⋯+(n−1k1,k2,k3,…,kp−1)=(n−1)!(k1−1)!k2!k3!⋯kp!+(n−1)!k1!(k2−1)!k3!⋯kp!+⋯+(n−1)!k1!k2!k3!⋯(kp−1)!=k1(n−1)!k1!k2!k3!⋯kp!+k2(n−1)!k1!k2!k3!⋯kp!+⋯+kp(n−1)!k1!k2!k3!⋯kp!=(k1+k2+⋯+kp)(n−1)!k1!k2!k3!⋯kp!=n(n−1)!k1!k2!k3!⋯kp!=n!k1!k2!k3!⋯kp!=(nk1,k2,k3,…,kp).

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Mazur, David R. (2010), Combinatorics / A Guided Tour, Mathematical Association of America, p. 60, ISBN 978-0-88385-762-5
  2. ↑ Brualdi, Richard A. (2010), Introductory Combinatorics (5th ed.), Prentice-Hall, p. 44, ISBN 978-0-13-602040-0
  3. 1 2 Brualdi, Richard A. (2010), Introductory Combinatorics (5th ed.), Prentice-Hall, p. 144, ISBN 978-0-13-602040-0

நூலடைவு

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசுக்கலின்_வாய்பாடு&oldid=3098057" இலிருந்து மீள்விக்கப்பட்டது