பாசிலா அல்லானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாசிலா அல்லானா
பிறப்பு1970
தேசியம்இந்தியன்
படித்த கல்வி நிறுவனங்கள்குயின் மேரி பள்ளி
சைடன்காம் கல்லூரி
பணிஇந்திய தொழிலதிபர்
பணியகம்டிசுனி இந்தியா நிறுவனம்

பாசிலா அல்லானா (Fazila Allana) ஒரு இந்திய தொழிலதிபர் ஆவார். 1970 ஆம் ஆண்டு இந்திய நாட்டின் மகாராட்டிரா மாநிலத்தின் தெற்கு மும்பையில் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் தொழில்[தொகு]

குயின் மேரி பள்ளி மற்றும் சைடன்காம் கல்லூரியில் படித்து 1991 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். பின்லாந்து நாட்டின் நகரமான ஒலுவில் ஓரிரு வருடங்கள் கழித்து பின்பு மும்பைக்கு திரும்பினார். அங்கு டிசுனி இந்தியா நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தார். அந்நிறுவனத்தார் மலேசிய நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டனர். இறுதியாக, அவர் மீண்டும் மும்பைக்கு வந்து ஜனவரி 2003 ஆம் ஆண்டு சோல் தயாரிப்பு பிரைவேட் லிமிடெட் என்ற தனது சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார். காபி வித் கரண், க்யா மசுத் கை லைப், மை கா லால், நச் பாலியே மற்றும் ராக்கி கா சுவயம்வர் போன்ற பிரபலமான நிகழ்ச்சிகளைத் தயாரித்துள்ளார். சோல் தயாரிப்பு பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். [1] [2] [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "SOL PRODUCTION PRIVATE LIMITED - Company, directors and contact details | Zauba Corp". www.zaubacorp.com. பார்க்கப்பட்ட நாள் 2019-11-03.
  2. "SOL India". Banijay Group (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-03.
  3. "The rise and rise of SOL Productions". Indian Television Dot Com (in ஆங்கிலம்). 2018-05-30. பார்க்கப்பட்ட நாள் 2019-11-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசிலா_அல்லானா&oldid=3908766" இலிருந்து மீள்விக்கப்பட்டது