உள்ளடக்கத்துக்குச் செல்

பாசவதைப் பரணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாசவதைப் பரணி என்பது பரணி என்னும் சிற்றிலக்கியம். [1] உழவன் களத்தில் நெல், கம்பு, கொள் முதலான கூலங்கள் அடிக்கக்கப்படும். நெல்கட்டுகளை அவிழ்த்து அடித்து தாளின்மீது மாடுகளைப் பிணையல் ஆக்கி நடத்திப் போர் அடிக்கப்படும். அதுபோல அரசனின் போர்க்களத்தில் பகைவர்களைக் கொன்று அவற்றின்மீது மன்னன் தன் படைகளை நடத்திப் போர் அடுப்பான். இதனை அதரி திரித்தல் என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

உழவன் போர்க்களத்தில் உழவன் நெல்லை அடித்து மக்களுக்கு வழங்குவான். அதனை உணவு சமைத்து உண்டு மக்கள் பசியாறுவர். அரசன் போர்க்களத்தில் அரசன் பகைவர்களை அதரி திரித்து கொன்று பேய்களுக்கு உணவு வழங்குவான். அதனைக் காளி தெய்வத்தின் கூளி முதலான படைகள் போர்க்களத்திலேயே சமைத்து உண்டு பசியாறும்.

பாசவதைப் பரணி: பாகுபாடு

[தொகு]
  1. கடவுள் வாழ்த்து
  2. கடை திறப்பு
  3. காடு பாடியது
  4. பேய்களைப் பாடியது
  5. கோயிலைப் பாடியது
  6. தேவியைப் பாடியது
  7. பேய் முறைப்பாடு
  8. கூளி கூறியது
  9. களம் காட்டல்
  10. கூழ்

என்று 10 தலைப்புகளில் இந்த நூல் அமைந்துள்ளது. 737 கண்ணிகளைக் கொண்டதாக இந்த நூல் அமைந்துள்ளது.

எடுத்துக்காட்டு

[தொகு]

வன்சொல் கூறி வைதவர்களை வாழ்த்தி மதித்து இன்சொல்லால் அவரை இடித்துத் தோற்கடிப்பது என் ஆண்மை என்று பொறுமை உள்ளவன் ஒருவன் கூறுவதாக ஒரு கண்ணி இவ்வாறு குறிப்பிடுகிறது.

 வன்சொலால் வைதாரை வாழ்த்தினர்போல் மதித்து என்றும்
இன்சொல்லால் அவர் பகைதான் இடிப்பது அன்றோ எனது ஆண்மை

பாட்டுடைத் தலைவன்

[தொகு]
  • கலிங்கத்துப் பரணி என்னனும் நூல் கருணாகரன் கலிங்கப் போரில் கண்ட வெற்றி பற்றிக் கூறுகிறது. இதன் பாட்டுடைத் தலைவன் போரில் வெற்றி பெற்ற கருணாகரன்.
  • இந்த நூல் பாசத்தை வெல்ல வழிகாட்டிய ஞான தேசிகர் புகழைப் போற்றுகிறது.

மேற்கோள்

[தொகு]
  1. பாசவதைப் பரணி, உ. வே. சா. பதிப்பு. சென்னை செனரல் அச்சுக்கூடம், பதிப்பு ஆண்டு 1033
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசவதைப்_பரணி&oldid=3830775" இலிருந்து மீள்விக்கப்பட்டது