கண்ணி (செய்யுள் உறுப்பு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மக்களுக்குக் கண் இரண்டு.
கண்ணைப் போல் இரண்டிரண்டு பூக்களை வைத்துத் தொடுக்கப்படும் பூமாலைக்குப் பெயர் கண்ணி.
தமிழில் பாடப்படும் பாடலில் இந்தப் பூக் கண்ணி போல் இரண்டிரண்டு அடிகள் எதுகையால் தொடுக்கப்படுவது கண்ணி.

எடுத்துக்காட்டு[தொகு]

தாழிசையாக வரும் தனிக் கண்ணி
சூதள வளவெனும் இளமுலைக் துடியள வளவெனும் நூண்ணிடைக்
காதள வளவெனும் மதர்விழிகு கடலமு தனையவர் திறமினோ [1]
தொடர்நிலையாக வரும் கண்ணி

1

தேர்மேவு பாய்புரவிப் பாசடைச் செங்கமலம்
போர்மேவு பாற்கடல் பூத்தனையோன் - பார்மேல்

2

மருளப் பசுவொன்றின் மம்மர் நோய்தீர
உருளுந் திருத்தேர் உரவோன் - அருளினால்

3

பேராப் பெரும்பகை தீரப் பிற வேந்தர்
ஊராக் குலிச விடையூர்ந்தோன் - சோராத்

4

துயில்காத்து அரமகளிர் சோர்குழை காத்தும்பர்
எயில் காத்தநேமி இறையோன் [2]

அடிக்குறிப்பு[தொகு]

  1. கலிங்கத்துப்பரணி பாடல் 21
  2. மூவருலா முதல் 4 கண்ணிகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணி_(செய்யுள்_உறுப்பு)&oldid=1385765" இலிருந்து மீள்விக்கப்பட்டது