பாக்கித்தான் சனநாயக மாதர் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாக்கித்தான் சனநாயக மாதர் சங்கம் (Democratic Women's Association) 1950 ஆம் ஆண்டில் தாகிரா மசார் அலி தலைமையில் இயங்கிய ஓர் அரசியல் அமைப்பாகும். பாக்கித்தானில் பெண்களின் உரிமையுடன் தொழிலாளர் உரிமைகளையும் சேர்க்கும் நோக்கத்துடன் இந்த அமைப்பு நிறுவப்பட்டது. பாக்கித்தானில் பெண்களின் உரிமைகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதல் இடதுசாரி அமைப்பு பாக்கித்தான் சனநாயக மாதர் சங்கமாகும்.[1]

அடிமட்டநிலையில் ஓர் இயக்கமாக சிறிய சுற்றுப்புறங்களில் தனது பணியைத் தொடங்கிய இச்சங்கம், பெண்கள் மற்றும் தொழிலாளர்களை அணிதிரட்டுவதில் ஈடுபட்டது.[2]

தலைமை[தொகு]

தாகிரா மசார் அலி பாக்கித்தான் சனநாயக மாதர் சங்கத்தின் நிறுவன பொதுச் செயலாளராக இருந்தார்.[3] பாக்கித்தான் தேசிய அரசியலில் அவரது ஈடுபாட்டை மேலும் மேம்படுத்துவதற்கு உதவிய கூட்டணிகளை இப்பதவி அனுமதித்தது.[3]

இந்த அரசியல் அமைப்பு பாக்கித்தான் நாட்டின் பொதுவுடைமைக் கட்சியுடன் இணைந்து இயங்கியது.

முக்கிய உறுப்பினர்கள்[தொகு]

  • தாகிரா மசார் அலி - நிறுவனர்
  • அசுரா மசூத்
  • கதீசா ஓமர்
  • அமத்துல் ரகுமான்
  • அலீசு பாய்சு

மேற்கோள்கள்[தொகு]

  1. Nafisa Hoodbhoy (25 March 2015). "Veteran leftist activist Tahira Ali laid to rest". www.aboardthedemocracytrain.com website (The Express Tribune newspaper) (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 11 September 2019.
  2. Jalil, Xari (2015-03-24). "Tahira Mazhar Ali’s death a profound loss to many" (in en). DAWN.COM (newspaper). https://www.dawn.com/news/1171442. 
  3. 3.0 3.1 "Tahira Mazhar Ali: Women’s rights campaigner who was the mother of Tariq Ali and acted as mentor to Benazir Bhutto" (in en-GB). The Independent (UK newspaper). 29 March 2015. https://www.independent.co.uk/news/people/tahira-mazhar-ali-women-s-rights-campaigner-who-was-the-mother-of-tariq-ali-and-acted-as-mentor-to-10141888.html.