உள்ளடக்கத்துக்குச் செல்

பாக்கித்தான் கனிம வளர்ச்சிக் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாக்கித்தான் கனிம வளர்ச்சிக் கழகம் (Pakistan Mineral Development Corporation) என்பது பாக்கித்தான் அரசாங்கத்தின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சகத்துடன் இணைக்கப்பட்ட ஓர் அரை தன்னாட்சி நிறுவனம் ஆகும். நாட்டின் கனிமவள மேம்பாட்டு நடவடிக்கைகளை விரிவாக்குவதற்கும் , உதவி செய்வதற்கும் தோராயமாக 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்துடன் 1974 ஆம் ஆண்டில் இந்நிறுவனம் உருவாக்கப்பட்டது.[1].

பாக்கித்தான் கனிம வளர்ச்சிக் கழகத்தின் தலமையகம் இசுலாமாபாத்து நகரில் அமைந்துள்ளதுஉப்பு சுரங்கங்கள், நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் சிலிக்கா மணல் சுரங்கங்கள் ஆகியவற்றை இந்நிறுவனம் இயக்குகிறது. மேலும், கனிம இருப்புகளை ஆய்வு செய்தல் மற்றும் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார செயலாக்க அறிக்கையை தயாரித்தல் போன்ற பணிகளையும் இந்நிறுவனம் மேற்கொள்கிறது. . தேவையான மற்றும் பொருத்தமான சமயங்களில் இந்த திட்டங்களை முன்னெடுத்தும் செல்கிறது. ம் உண்மையில் கனிமங்களை வெட்டி எடுத்தும் பாக்கித்தானின் தாதுக்களை சந்தைப்படுத்தியும் இந்நிறுவனம் இயங்குகிறது[2].

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.pmdc.gov.pk/, Pakistan Mineral Development Corporation official website, Retrieved 24 July 2016
  2. https://www.bloomberg.com/Research/stocks/private/snapshot.asp?privcapid=29436450, Company Overview of Pakistan Mineral Development Corporation on bloomberg.com website, Retrieved 24 July 2016

புற இணைப்புகள்

[தொகு]