பழைய மடிவாலா சோமேஸ்வரர் கோயில், பெங்களூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பழைய மடிவாலா சோமேஸ்வரர் கோயில் இந்தியாவில், கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு நகரில் (பெங்களூர்) அமைந்துள்ள இந்து சிவன் தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள கோயிலாகும். அதன் மூலவர் சோமேஸ்வரர் ஆவார். இது நகரின் பழமையான கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும், இது சோழ காலத்திற்கு முந்தையதாகக் கருதப்படுகிறது. இந்த கோயில் 12 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்தது. (கி.பி 1247).

இந்த கோவிலில் ஒரு " சுயம்பு " சிவலிங்கம் உள்ளது, அதில் அமைந்துள்ள கருவறையில் (இயற்கை பாறை உருவாக்கம் உருவாக்கிய சிவலிங்கம் வடிவில்) உள்ளது. ஆனால் பெங்களூரில் உள்ள மற்ற பழங்கால கோயில்களைப் போலல்லாமல், இந்த கோயில் நல்ல நிலையில் உள்ளது. அங்குள்ள மக்களால் அகோயில் நன்கு பராமரிக்கப்படுகிறது. வெளிப்புற உதவியின்றி நமது பாரம்பரியத்தை பாதுகாப்பதில் மக்களுக்கு இருக்கும் உண்மையான வலிமையை இது எடுத்துக் காட்டுகிறது. இது மிகவும் சக்திவாய்ந்த மற்றும் பண்டைய கோயில் ஆகும்.

தமிழில் கல்வெட்டுகள்[தொகு]

மடிவாலாவில் உள்ள சோமேஸ்வரர் கோயில் பெங்களூரின் பழமையான கோயிலாகும், இது சோழர் காலத்திற்கு முந்தையதாகக் கருதப்படுகிறது. கோயிலின் வெளிப்புற சுவர்களில் ஏராளமான தமிழ் மற்றும் கிரந்த எழுத்துக்களால் ஆன கல்வெட்டுகள் உள்ளன. இந்த கல்வெட்டுகளில் மிகப் பழமையானதாகக் கருதப்படுவது கி.பி 1247ஆம் ஆண்டைச்சேர்ந்ததாகும். அக்கல்வெட்டில் நிலக்கொடையைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. வெங்களூரின் பெரிய குளத்திற்கு அருகேயுள்ள நிலம் வேப்பூர் (நவீன பேகூர்) என்ற ஊரைச் சேர்ந்த ஒருவர் நிலத்தைக் கொடையாக வழங்கியுள்ளதைப் பற்றி அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற கல்வெட்டுகள் பல்லாலா III மற்றும் ராஜேந்திர சோழரின் ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட நிலக்கொடைகளைப் பற்றியும், பிறரால் வழங்கப்பட்ட நிலக்கொடைகளைப் பற்றியும் குறிப்பிடுகின்றன. கி.பி.1365 ஆண்டைச் சேர்ந்த மற்றொரு கல்வெட்டு தமிழில் உள்ளது. அக்கல்வெட்டில் தாமரைக்கரை என்றுமிடத்தில் வழங்கப்பட்ட நிலத்தைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்விடம் 'தாமரை குளக்கரை' என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, மேலும் கர்நாடகா இதிஹாசா அகாடமியின் செயலாளர் எச்.எஸ். கோபால ராவ் கருத்துப்படி, இன்றைய தவரகேரே புறநகர்ப் பகுதியைக் குறிக்கிறது.[1]

வெங்களூர் (இன்றைய 'வேப்பூர்' (பேகூர்))[தொகு]

பேகூர் என்பதானது கல்வெட்டில் வேப்பூர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 'வா' என்ற எழுத்தில் தொடங்கும் சில தமிழ்ச் சொற்கள் கன்னடத்தில் 'பா' [2][3] என்று உச்சரிக்கப்படுகின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பேகூர் கல்வெட்டு பெங்களூர் என்னும் ஊரைக் குறிப்பிடுகிறது. கி.பி.890ஐச் சேர்ந்த அக்கல்வெட்டில் பெங்களூரு கடனா (பெங்களூர் போர்)என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டில், வெங்களூர் என்ற குறிப்பு காணப்படுகிறது.வெங்களூர் என்று தமிழில் கூறப்படுவது, கன்னடத்தில் பெங்களூர் என்றழைக்கப்படுகிறது. எபிகிராபிகா கர்னாடகாவில் இக்கல்வெட்டினைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.[4]

தாமரைக்கரை (இன்றைய தவரகேரே)[தொகு]

தவரகேரே என்பதானது ஒரு காலத்தில் தாமரைக்கரை என்றழைக்கப்பட்டுள்ளதைக் கல்வெட்டுகளின் (1365 கி.பி.) மூலமாக அறிய முடிகிறது. தாமரைக்கரை என்பதற்கு தமிழில் தாமரைக் குளத்தின் கரைகள் என்பது பொருளாகும்.[5]

சிறப்பு நாட்கள்[தொகு]

மகா சிவராத்திரி  : ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் இந்து நாட்காட்டியில் கிருஷ்ண பட்சத்தில், மாகா (சாலிவாகன ஆண்டின்படி ) அல்லது பல்குனா (விக்ரம ஆண்டின்படி) நாளில்(அதாவது அமாவாசைக்கு முந்தைய இரவு மற்றும் பகல் ) மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது.

பிரதோஷம்  : ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறை நிகழ்வதும், மற்றும் சைவர்களால் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுவதும் ஆகும். அமாவாசை அல்லது பௌர்ணமிக்கு இரு நாள்களின் முன்பாக இந்நாள் கொண்டாடப்படுகிறது.

புகைப்படத்தொகுப்பு[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Ancient temple; bustling junction". Deccan Herald. http://www.deccanherald.com/content/14855/content/212867/from-mann-mysore.html. பார்த்த நாள்: 4 January 2015. 
  2. Kolar Gold Field: (Unfolding the Untold). Partridge Publishing. https://books.google.com.au/books?id=QrWEAwAAQBAJ&pg=PA57&lpg=PA57&dq=tamil+inscription+begur&source=bl&ots=Sgb21oFSbS&sig=-fkFbSwBzxqREUWmt6Q6sbXs_oU&hl=en&sa=X&ei=Unu7VNTFB6bFmwXkiYJA&ved=0CCIQ6AEwATgK#v=onepage&q=tamil%20inscription%20begur&f=false. பார்த்த நாள்: 18 January 2015. 
  3. "A Temple, God's Home, Is Even More Than That". HINDUISM TODAY. Archived from the original on 24 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 11 June 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. Wow, That’s Old! How Heritage Researchers Stumbled Upon ‘Bengalur’ in 1247. The Better India, 15 November 2017
  5. 5.0 5.1 "DeccanHerald". DeccanHerald. http://www.deccanherald.com/content/14855/tv-talk.html.