பழைய துறைமுக இல்லம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பழைய துறைமுக விடுதி (2006)

பழைய துறைமுக இல்லம் (Old Harbour House) இந்தியாவில் கேரள மாநிலம் கொச்சி கோட்டையின் மையத்தில் உள்ள ஒரு கட்டிடம் ஆகும். எர்ணாகுளம் மாவட்டத்தில் முன்னதாக கொச்சின் என்று அழைக்கப்பட்ட நகரத்தின் ஒரு பகுதியில் இந்த இல்லம் அமைந்துள்ளது. போர்த்துகீசிய காலனித்துவ காலத்தில் பழைய துறைமுக இல்லம் கட்டப்பட்டது. 17 ஆம் நூற்றாண்டில் டச்சுக்காரர்களால் முழுமையாக மீண்டும் கட்டப்பட்டது. பின்னர் ஆங்கிலேயர்களால் இல்லம் மாற்றியமைக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டில் காலனித்துவ தோற்றம் பற்றிய பல குறிப்புகளுடன் செருமானிய கட்டிடக் கலைஞர் கார்ல் டாம்சனால் இந்த இல்லம் கவனமாக மீட்டெடுக்கப்பட்டது. இன்று இந்த இல்லத்தில் பொட்டிக்கு விடுதி எனப்படும் சிறிய பழைய துறைமுக விடுதி ஒன்று உள்ளது.[1][2][3][4][5][6][7]

புனரமைப்புக்கு முன்னர் பழைய துறைமுக இல்லம்

மேற்கோள்கள்[தொகு]

  1. Mathew T. Georg: Old Harbour Hotel. In: The Week. 25. November 2005.
  2. Tanya Abraham: Due respect for the old. In: Metro Plus, Kochi, The Hindu, 12. August 2006 ; Weblink
  3. Manuela Kessler: Architekt hilft Handwerkern. In: Süddeutsche Zeitung. 30. Dezember 2006, p. 16.
  4. Tabitha May: The Old Harbour Hotel, Cochin: where to stay. In: The Telegraph, 26. August 2008
  5. Restoration area, Fort Kochi: Old Harbour House makeover. In: Indian Express, 4. Oktober 2006
  6. Priyadarshini Sharma: Heritage homes turn hotels. In: The Hindu. 6. August 2005.
  7. Prema Manmadhan: Anchored to the past: Old Harbour House. In: The Hindu. 23. Januar 2010.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பழைய_துறைமுக_இல்லம்&oldid=3845210" இலிருந்து மீள்விக்கப்பட்டது