பழைய ஃபெஸ் நகரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மதீனா ஃபெஸ்*
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
Fes, Old Medina.jpg
நாடு மொரோக்கோ
வகை பண்பாடு
ஒப்பளவு ii, v
மேற்கோள் 170
பகுதி அரபு நாடுகல்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு 1981  (5ஆவது அமர்வு)
* பெயர் உலக பாரம்பரியப் பட்டியலில் குறித்துள்ளபடி.
பகுதி, யுனெஸ்கோவினால் வகைப்படுத்தப்பட்டபடி.


ஃபெஸ் எல் பாலி (Fes el Bali) என அரபு மொழியில் வழங்கப்படும் பழைய ஃபெஸ் நகரம், மொரோக்கோவிலுள்ள, மிகப் பழையதும், மதிலால் சூழப்பட்டதுமான ஃபெஸ் நகரின் பகுதியாகும். இது இரண்டாம் இத்ரிசிட் இத்ரிஸினால் (Idrisid Idris II.) அமைக்கப்பட்டது. புதிய ஃபெஸ் எனப்படும் நகரின் புதிய பகுதி 1276 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டதாகும்.

பழைய ஃபெஸ் நகரமே இரண்டு ஃபெஸ் நகரப் பகுதிகளுள் பெரியது ஆகும். அத்துடன் மக்கள்தொகை அடிப்படையில் உலகில் மிகப்பெரிய தொடர்ச்சியான மோட்டார் வண்டிகளற்ற நகரப் பகுதியாகும். இது 1981 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பழைய_ஃபெஸ்_நகரம்&oldid=1347407" இருந்து மீள்விக்கப்பட்டது