பழகுநர் உரிமம்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பழகுநர் உரிமம் என்பது வாகனம் ஒன்றை ஓட்டப் பழகுபவர்களுக்காக அளிக்கப்படும் ஓட்டுனர் உரிமம் ஆகும். இந்தியாவைப் பொருத்தமட்டில் பொதுவாக இது ஆறு மாத காலம் செல்லுபடியாகும். இந்தக் கால கட்டத்தில், ஏற்கனவே ஓட்டுனர் உரிமம் பெற்ற ஒருவரின் உதவியுடன் பழகுபவர் வாகனத்தை சாலைகளில் ஓட்டிப் பயிற்சி செய்யலாம்.
விதிமுறைகள்[தொகு]
இந்தியாவில் பழகுனர் உரிமம் பற்றிய விதிமுறைகள்
- பயிற்சி அளிப்பவர் இன்றி தனியாளாக பழகுபவர் வாகனத்தை இயக்கக் கூடாது
- எப்பொழுதும் பழகுநர் உரிமத்தைக் கையகத்தே கொண்டிருக்க வேண்டும்
- வாகன முகப்பிலும் பின்புறமும் 'L' குறியீடு பொருத்தப்பட்டிருக்க வேண்டும்
ஓட்டுனர் உரிமம் பெறுதல்[தொகு]
பயிற்சிக்காலம் முடிந்தபின் தேர்வின் மூலமாக ஓட்டுனர் உரிமம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனைக்குப் பின் பெறப்படும்.