பள்ளிப்பட்டு பட்டாசு கடை தீ விபத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பள்ளிப்பட்டு பட்டாசு கடை தீ விபத்து என்பது 2009 இல் தமிழ்நாடு மாநிலம் திருவள்ளுவர் மாவட்டம் பள்ளிப்பட்டில் நிகழ்ந்த தீ விபத்தாகும். இந்த தீ விபத்தில் 32 நபர்கள் பலியானார்கள். [1] பலியானவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு தலா ரூபாய் ஒரு லட்சமும், ஆந்திர அரசு 27 பேருக்கு தனியாக தலா ரூபாய் ஒரு லட்சமும் இழப்பீடாக வழங்கின.

நிகழ்வு[தொகு]

2009 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ம் நாள் தமிழ்நாடு மாநிலம் திருவள்ளுவர் மாவட்டம் பள்ளிப்பட்டில் சோளிங்கர் சாலையில் ஜெய்சங்கர் என்பவருக்கு சொந்தமான அரிசி ஆலையில், ஆனந்தகுமார் என்பவர் பட்டாசு கடை அமைத்திருந்தார்.அந்த பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் பலியாகினர்.[1] இதில் 27 பேர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள்.[1]

வழக்கு[தொகு]

இந்தப் பட்டாசு தீ விபத்து குறித்து மாவட்ட வருவாய் துறை அதிகாரி விசாரணை நடத்தினார். அதில் உரிமை பெறாமலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை கடைபிடிக்காமலும் நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளர் மீது வழக்கு போடப்பட்டது.

தீர்ப்பு[தொகு]

வழக்கினை விசாரித்த உயர் நீதிமன்றம் பலியான முப்பது இரண்டு நபர்களின் குடும்பங்களுக்கு இரண்டு கோடியே எழுபத்து ஆறு இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தீர்ப்பளித்தது.[1] இந்த பணத்தினை தீ விபத்தான கடை உரிமையாளரும், தமிழக அரசும் இணைந்து வழங்க வேண்டும் என்பது தீர்ப்பாகும்.


ஆதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "பள்ளிப்பட்டு பட்டாசு கடை தீ விபத்தில் பலியான 32 பேர் குடும்பத்துக்கு ரூ.2.76 கோடி இழப்பீடு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு". tamil hindu.