பல்வகை ஆளுமை நோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பல்வகை ஆளுமை நோய்
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புஉளநோய் மருத்துவம், உளவியல்
ஐ.சி.டி.-10F44.8
ஐ.சி.டி.-9300.14
ஈமெடிசின்article/916186
ம.பா.தD009105

பல்வகை ஆளுமை நோய் (multiple personality disorder) என்பது மிக அரிதான மன நோயாகும்.

நோயின் இயல்புகள்[தொகு]

பல்வகை ஆளுமை நோய் உலகின் மிகவும் அரிதான மன நோய். பெண்கள்தான் இந்த நோய் பாதிப்புக்கு அதிகம் உள்ளாவதாக கூறப்படுகிறது. இந்த நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் ஒவ்வொரு ஆளுமைக்கும் தனித்த சிந்தனை,தனி அடையாளம் கொண்டிருப்பார்கள். இவர்களால் இரகசியம் காப்பது இயலாத காரியமாக இருக்கும்.

தொடர்பறு அடையாளப் பாதிப்பு[தொகு]

தொடர்பறு அடையாளப் பாதிப்பு (Dissociatiative identity disorder) என்பது இந்த பாதிப்பின் இன்னொரு அம்சம். இந்த நோயைத் துவக்க நிலைநில் கண்டறிய இயலும். பல்வகை ஆளுமை நோய்பாதிப்பு நொடக்க நிலையில் உள்ளவர்கள், பேசும்போது தன்னையே வேறு ஒரு நபர்போலப் பாவித்து பேசுவார். பல விசயங்களை நினைவிலிருந்து மறந்துவிடுவார். காலமறதி ஏற்படும். அதாவது இரண்டு காலகட்டத்திலும் குறிப்பிட்ட சில நாட்களை மறந்துவிடுவார்கள். திடீரென வெகுதூரம் பயணித்து ஒரு புதிய இடத்திற்கு சென்று, அங்கு ஒரு புதிய மனிதன் போல வாழ்ந்து கொண்டிருப்பார்.

சிகிச்சை[தொகு]

பெரும்பாலும் இந்நோயை குணப்படுத்திவது கடினம். ஹிப்னாட்டிச முறையில் சிகிச்சை அளிக்கலாம்.

திரைப்படத்தில்[தொகு]

அந்நியன் திரைப்படத்தில் கதாநாயகன் விக்ரம் இந்நோய் பாதித்தவராகக் கற்பனை கலந்து காட்டப்பட்டுள்ளது.[1]

குறிப்புகள்[தொகு]

  1. தி இந்து, தமிழ், நலம் வாழ இணைப்பு 31.1.2015
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்வகை_ஆளுமை_நோய்&oldid=3639745" இலிருந்து மீள்விக்கப்பட்டது