உள்ளடக்கத்துக்குச் செல்

பல்கோணக் கூம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கட்டகக் கூம்பு

பல்கோணக் கூம்பு அல்லது கூம்பகம் (Prismatoid) என்பது ஒரு திண்ம வடிவம். வடிவவியலில் அடிப்புறம் ஒரு பல்கோணமாக இருந்து அதன் ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் எழுப்பும் முக்கோணங்கள் ஒரு முனையில் கூடினால் உண்டாகும் திண்ம வடிவமாகும். அடிப்புறம் கட்டமாக (சதுரமாக) இருந்தால், இதனை கட்டகக் கூம்பு அல்லது சதுரக்கூம்பு என்று அழைப்பர். இதனைப் படத்தில் காணலாம். 5000 ஆண்டுகளுக்கும் முன்னர் எகிப்தியர் எழுப்பிய பிரமிடு என்னும் கட்டடடங்கள் இவ் வகையானவைதான். அடிப்புறம், ஐங்கோணமாக, அறுகோணமாக என்று ஏதாவதொரு பல்கோணமாக இருக்கலாம். அடிப்புறம் வட்டமாக இருந்தால் இதனை அடைமொழி இல்லாமல் கூம்பு என்று கூறப்படும்.

தொல் பழம் எகிப்திய பிரமிடுகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்கோணக்_கூம்பு&oldid=3346449" இலிருந்து மீள்விக்கப்பட்டது