பலாங்கீர் லோக் மகோத்சவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பலாங்கீர் லோக் மகோத்சவம் (Balangir Lok Mahotsav) பொதுவாக ஒவ்வொரு குளிர்காலத்திலும் (திசம்பர்-சனவரி) இந்தியாவின் ஒடிசா மாநிலம் பலாங்கீர் நகரில் நடைபெறுகிறது.

திருவிழா[தொகு]

விழாவில் நிசான் இசைக் கலைஞர்கள் நடனமாடுகிறார்கள்
ஒரு நடனக் கலைஞர் தோலக்கின் தாளத்திற்கு ஏற்ப நடனமாடுகிறார்

திருவிழா 2 முதல் 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது. [1] பாரம்பரியப் பண்பாடு, பாடல்கள், நடனங்கள் மற்றும் இசையை பிரபலப்படுத்துவதை திருவிழா நோக்கமாகக் கொண்டுள்ளதால், மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் பண்பாட்டுச் சங்கங்களை ஒன்றிணைக்க அமைப்பாளர்கள் முயற்சி செய்கிறார்கள். பல பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாத சமூகங்கள் இந்த திருவிழாவில் தங்கள் வளமான பாரம்பரியத்தை வெளிப்படுத்துகின்றன.

கூடுதலாக, பல்வேறு கிராமப்புற சமூகங்கள் தங்கள் தயாரிப்புகளை இங்கு விற்பனை செய்கின்றன. திருவிழா சந்தைகளில் கைவினைப்பொருட்கள், நெல்-கைவினை, கைத்தறி, மண் வடிவமைப்புகள் மற்றும் உணவு பொருட்கள் விற்பனையாகின்றன. [2]. பல்வேறு அரசு நிறுவனங்களால் நிதியளிக்கப்பட்ட பல்வேறு சுயஉதவி குழுக்களால் அமைக்கப்பட்ட அரங்குகளில் பொருட்கள் விற்கப்படுகின்றன இத்தகைய சந்தைகள் கலை மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றத்திற்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்குகின்றன.

அவ்வப்போது அமைப்பாளர்கள் பல்வேறு இடங்களைச் சேர்ந்த இளம் மற்றும் பிரபலமான திறமைசாலிகளை இத்திருவிழாவில் பாராட்டி வருகின்றனர். [3] ஒடிசாவின் பல்வேறு மாவட்டங்களிலும் இத்தகைய திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. இந்த திருவிழாவின் பெயரை கோசல் திகார் என்று பெயர் மாற்ற கோரிக்கை எழுந்தது [4]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bolangir lok utsav 2017". newstrend.news. Newstrend. பார்க்கப்பட்ட நாள் 12 March 2020.
  2. Balangir Lok Mahotsav: Rural products a hit
  3. Balangir Lok Utsav starts sans important guests
  4. "17th Balangir lok Utsav". newstrend.news. Newstrend. பார்க்கப்பட்ட நாள் 12 March 2020.