பலவந்து ஆப்தே
பால் ஆப்தே Bal Apte | |
---|---|
மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் 3 ஏப்ரல் 2000 – 2 ஏப்ரல் 2012 | |
தொகுதி | மகாராட்டிரம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பலவந்து ஆப்தே 18 சனவரி 1939 இராச்குருநகர், புனே மாவட்டம், மகாராட்டிரம் |
இறப்பு | 17 சூலை 2012 மும்பை, மகாராட்டிரம் | (அகவை 73)
அரசியல் கட்சி | பாரதிய சனதா கட்சி |
துணைவர் | நிர்மலா ஆப்தே |
பிள்ளைகள் | இயானவி (மகள்) |
முன்னாள் கல்லூரி | அரசு சட்டக் கல்லூரி, மும்பை, மும்பை பல்கலைக்கழகம். |
தொழில் | வழக்கறிஞர் |
பலவந்து ஆப்தே (Balavant Apte) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். பால் ஆப்தே என்றும் பாலாசாகேப் ஆப்தே என்றும் இவர் அழைக்கப்படுகிறார். 1939 ஆம் ஆண்டு சனவரி மாதம் 18 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். ஒரு வழக்கறிஞராகவும் பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராகவும் இவர் செயல்பட்டார். மகாராட்டிர மாநிலத்தின் மாநிலங்களவையில் உறுப்பினராக இந்திய நாடாளுமன்றத்தில் பணியாற்றினார். முதுகலைப் படிப்பும் சட்டப்பாடத்தில் முதுநிலைப் பட்டமும் பெற்று ஒரு வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். மும்பையில் உள்ள இந்துச்சா மருத்துவமனையில் 2012 ஆம் ஆண்டு சூலை மாதம் 17 ஆம் தேதியன்று இறந்தார்.[1][2]
தொழில்
[தொகு]பால் ஆப்தே பாரதிய சனதா கட்சியின் துணைத் தலைவராக இருந்தார். ராம சென்மபூமி இயக்கத்தின் சட்ட நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டார். 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பாரதிய சனதா கட்சியின் தோல்விக்குப் பிறகு, கட்சியின் தோல்விக்கான காரணங்களைப் பற்றிய அறிக்கையை உருவாக்க இவர் நியமிக்கப்பட்டபோது புகழ் பெற்றார். பால் ஆப்தே அறிக்கை என்று அழைக்கப்படும் இந்த அறிக்கை கட்சியின் செயல்பாடு குறித்த பெரிய விமர்சனமாகவும், அதன் பல முக்கிய தலைவர்களின் மீதான மறைமுக குற்றச்சாட்டாகவும் இருந்தது.
ஆப்தே இராசுட்ரிய சுவயம்சேவக் சங்கின் அர்ப்பணிப்புள்ள சுவயம்சேவக் மற்றும் அகில பாரதிய வித்யார்த்தி பரிசத்தின் தேசியத் தலைவர் என 38 ஆண்டுகளாக இக்கட்சியில் செயல்பட்டார். மகாராட்ரா மாநிலத்தின் கூடுதல் தலைமை வழக்கறிஞராகவும், இந்திய உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராகவும் பணியில் இருந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Senior BJP leader and RSS ideologue Bal Apte passes away". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 17 July 2012 இம் மூலத்தில் இருந்து 3 January 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103134953/http://articles.timesofindia.indiatimes.com/2012-07-17/india/32713120_1_rss-ideologue-senior-bjp-leader-bjp-president. பார்த்த நாள்: 2014-09-26.
- ↑ "Bal Apte: Organisation Man, Ideal Politician". Organiser. 22 July 2012. Archived from the original on 21 January 2016. பார்க்கப்பட்ட நாள் 2014-09-26.