பற்றுக்கால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒரு கடற்களை பாறையை பற்றியுள்ளது.

பற்றுக்கால் (holdfast) என்பது ஒரு வேர் போன்ற உறுப்பாகும். இவை நீர்வாழ் விளங்கான செசிலிட்டி உயிரினங்களில் காணப்படும். காம்பிலி உயிரினங்களான கடற்பாசி, கடல் அல்லி, கடலடி உயிரினங்கள், நிடேரியா, அல்கா பஞ்சுயிரி, போன்றவை வாழ்தளங்களில் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள இந்த பற்றுக்கால் உதவுகிறது. [1]

அமைப்பு[தொகு]

இனம் மற்றும் வாழ்தளங்களைப் பொறுத்து பற்றுக்கால்கள் அமைப்பிலும் வடிவத்திலும் மாறுபடுகின்றன. சேறு போன்ற வாழ்தளங்களில் வாழும் உயிரினங்களின் பற்றுக்கால்கள் சிக்கலான பின்னிப்பிணைந்த வேர் போன்று காணப்படுகின்றன, மணல் வாழ்தளங்களில் வாழும் உயிரினங்களின் பற்றுக்கால்கள் மிகவும் நெகிழ்வுத்தன்மை உடையதாக இருக்கும். இதனால் பற்றுக்கால்கள் சுருங்கும் போது உயிரினத்தின் முழு உடற்பகுதியும் வாழ்தளத்தினுள் இழுத்து வைத்துக்கொள்ள முடியும். கடற்பாறை போன்ற வழுவழுப்பான வாழ்தளங்களில் வாழும் உயிரினங்களின் பற்றுக்கால்கள் தட்டையான அடிப்பகுதியுடன் வாழ்தளத்தின் மேற்பரப்பின்மீது நன்கு ஒட்டிக்கொள்ளுமாறு அமைந்துள்ளது.

பணி[தொகு]

பற்றுக்கால்களைக்கொண்ட காம்பிலி உயிரினங்கள் தங்களின் வாழ்தளங்களிலிருந்து எந்த உணவுபொருட்களையும் உறிஞ்சிப் பெறுவதில்லை, ஏனெனில், உணவை உறிஞ்சும் செயலின்போது வெளிப்படும் நொதிகள் வாழ்தளத்தைச் சிதைத்துவிடும். அதனால் உயிரினங்கள் வாழ்தளத்திலிருந்து நீங்கி விழுந்துவிடும் அபாயம் உள்ளது. கடற்பாசி, கடற்பூண்டு, மற்றும் பிற பாசி இனங்களில் காணப்படும் பறவைகளின் நகங்களைப்போன்ற பற்றுக்கால்களும் நிலவாழ் தாவரங்களைப்போல் உறிஞ்சும் பணியைச் செய்வதில்லை, உயிரினத்தை அதன் வாழ்தளங்களில் நிலை நிறுத்தும் பணியை மட்டும் செய்கின்றன.[2]

சான்றுகள்[தொகு]

  1. D. N. Thomas (2002). Seaweeds. Natural History Museum, London. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-565-09175-1. 
  2. Attenborough, D.1984. The Living Planet. p. 232 & 235. Collins BBC ISBN 0-563-20207-6
"https://ta.wikipedia.org/w/index.php?title=பற்றுக்கால்&oldid=2915453" இருந்து மீள்விக்கப்பட்டது