பர்கத் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பர்கத் சிங்
Pargat Singh
தனிநபர் தகவல்
பிறப்பு5 மார்ச்சு 1965 (1965-03-05) (அகவை 59)
மித்தாபூர், சலந்தர்
பஞ்சாப், இந்தியா
உயரம்180 cm (5 அடி 11 அங்)

பர்கத் சிங் (Pargat Singh) என்பவர் இந்தியாவின் வளைகோல் பந்தாட்ட வீரராக இருந்து இந்திய அரசியலுக்குள் வந்த வீரர்களில் ஒருவராவார். ஆளும் சிரோமணி அகாலி தல் கட்சியைச் சேர்ந்தவராக உள்ளார். இந்தியாவிற்காக வளைகோல் பந்தாட்டத்தில் பங்கேற்ற இவர் ஆட்டத்தின் போது பின்கள தடுப்பாட்ட வீரர் நிலையில் விளையாடினார். இந்நிலையில் விளையாடும் தலைசிறந்த உலக விளையாட்டு வீரர்களில் இவரும் ஒருவராவார். 1992 இல் நடைபெற்ற பார்சிலோனா ஒலிம்பிக் கோட்டியிலும், 1996 இல் நடைபெற்ற அட்லாண்டா ஒலிம்பிக் போட்டியிலும் இந்திய வளைகோல் பந்தாட்ட அணிக்கு இவர் தலைமையேற்று விளையாடினார். அரசியலுக்குள் பிரவேசிப்பதற்கு முன்பு பஞ்சாப் மாநிலக் காவல் துறையில் இவர் பணிபுரிந்தார்.

சாம்பியன்கள் போட்டி[தொகு]

1985 (பெர்த்)[தொகு]

இந்தியா X செருமனி : இந்த ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் இந்தியா 1-5 என்ற புள்ளிகள் கணக்கில் பின் தங்கியிருந்தது. இளம் வீரரான பர்கத் சிங் முன்களத்திற்கு ஆடவந்து ஆட்டத்தின் கடைசி ஆறு நிமிடங்களில் 4 கோல்கள் அடித்து அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொண்டார். அந்த ஆட்டம் வெற்றி தோல்வி ஏதுமின்றி சமநிலையில் முடிந்தாலும் பர்கத் சிங் ஒரு உண்மையான கதாநாயகனாக மிளிர்ந்தார்[1]

1986 (கராச்சி)[தொகு]

செருமனிக்கு எதிரான ஆட்டத்தில் அற்புதம் நிகழ்த்திய பர்கத் சிங்கின் ஆட்டம் கராச்சியில் ஆலந்துக்கு எதிரான ஆட்டத்திலும் தொடர்ந்தது. இந்தியா இப்போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் ஆலந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.

அரசியல் வாழ்க்கை[தொகு]

சலந்தர் பாளையம் சட்டப்பேரவை தொகுதிக்காக சிரோன்மணி அகாலிதல் கட்சியின் சார்பாக போட்டியிட்ட பர்கத் சிங் அடுத்தடுத்து காங்கிரசு கட்சியைச் சேர்ந்த யக்பீர் பிராருக்கு எதிராக வெற்றி பெற்றார்[2]

மதிப்புகள்[தொகு]

சலந்தர் நகரில் செயல்பட்டு வந்த புகழ்மிக்க சுர்சித் சிங் நினைவு வளைகோல் பந்தாட்ட போட்டிக் கழகத்தின் துணைத் தலைவராக பொறுப்பேற்று செயல்பட்டார்[3]

விருதுகள்[தொகு]

S.No. விருதுகள் ஆண்டு
1 பத்மசிறீ[4] 1998
2 அருச்சுனா விருது 1989

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pargat Singh – ESPNSTAR.com".
  2. "Pargat Singh". timesofindia.indiatimes.com. Archived from the original on 2011-03-01. பார்க்கப்பட்ட நாள் 2016-07-04.
  3. "Sports Personalities".
  4. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on நவம்பர் 15, 2014. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்கத்_சிங்&oldid=3561889" இலிருந்து மீள்விக்கப்பட்டது