பரிசு அட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பல வகை பரிசு அட்டைகள்

பரிசு அட்டை (Gift Card) (வட அமெரிக்காவில் 'பரிசுச் சான்றிதழ்' (Gift Certificate) எனவும், இங்கிலாந்தில் 'பரிசு இரசீது' (Gift Voucher) அல்லது 'பரிசு வில்லை' (Gift Token) என்றும் அழைக்கப்படுகிறது[1]).

'பரிசு வில்லை' எனப்படுவ்து, ஒரு குறிப்பிட்ட கடையில் அல்லது தொடர்புடைய வணிக நிறுவனத்தில் பொருளை வாங்குவதற்குப் பணத்துக்கு மாற்றாக வங்கிகள் அல்லது தனி நிறுவனங்களால் வழங்கப்படும் 'தேய்ப்பு அட்டை' (Swipe Card) ஆகும். இதில் முன்கூட்டியே குறிப்பிட்ட அளவில் பணமதிப்பு சேர்க்கப்பட்டிருக்கும். இவை பெரும்பாலும் நிறுவனத் தொழிலாளர்களுக்கும் வாடிக்கையாளருக்கும், அவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ள, அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களால் ஊக்கத் தொகையாகவும் சிறப்பு நிலைப் பணிகளுக்குப் பரிசாககவும், விளம்பரத்திற்காகக்வும், விழாக்காலப் பரிசுகளாகவும் அவ்வப்போது வழங்கப்படுகின்றன.

பரிசு அட்டைகள் பெரும்பாலும் அச்சிட்ட காகித அட்டைகளாகவே வழங்கப்படுகின்றன. சில வேளைகளில் 'மின்னணுத் தகவல் அட்டை' முறையிலும் வழங்கப்படுவதுண்டு. இந்த அட்டைகள் தோற்றத்தில் 'கடன் அட்டை' அல்லது 'பற்று அட்டை' போலவே இருக்கும். இந்த அட்டைக்குத் தனியான வரிசை எண் மற்றும் ரகசிய எண் இருக்கும். இந்த அட்டைகளைக் கடைகளில் வைக்கப்பட்டுள்ள 'துழவு இயந்திரம்' (Card Scanner) அல்லது 'விற்பனை மைய இயந்திரம் (POS-Point of Sale) வழியாகப் பயன்படுத்திப் பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும். இவற்றை, இணைய வணிக நிறுவனங்களின் 'இயங்கலைக் கடைகள்' (On-line Shop) மூலம் பொருட்கள் வாங்குவதற்கும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இந்த அட்டைகளில் இருந்து பொருட்களை வாங்க ஒரு குறிப்பிட்ட 'செல்லுபடிக் காலம்' (Validity Period) கொடுக்கப்பட்டிருக்கும் அந்தக் காலத்திற்குள் அந்த அட்டையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். செல்லுபடிக் காலம் கடந்தவுடன் தானாகவே அந்த அட்டையின் பயன்பாடு அதனுடைய நிறுவனத்தால் தடைசெய்யப் பட்டு விடும்[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://dictionary.cambridge.org/dictionary/british/gift-token
  2. மீரா சிவா (31 சூலை 2017). "பணத்துக்கு மாற்றாகும் கிப்ட் கார்டு". கட்டுரை. தி இந்து. 31 சூலை 2017 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரிசு_அட்டை&oldid=3577718" இருந்து மீள்விக்கப்பட்டது