பரவலாகப் பொருந்தும் கண்காணிப்புக் கருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரவலாகப் பொருந்தும் கண்காணிப்புக் கருவி (Broadly Applicable Tracking System) என்பது விலங்குகளின் அசைவுகளைக் கண்காணிக்க அறிவியலாளர்கள் பயன்படுத்தும் ஒரு சிறிய, இலகுரக கருவியாகும். ஒரு முதுகுப்பை போன்ற வடிவத்தில் இது உள்ளது. ஒரு வௌவால் அல்லது பிற சிறிய விலங்குகளின் பின்புறத்தில் இவ்வமைப்பு ஒட்டப்படுகிறது. இதில் புவியிடங்காட்டி மற்றும் கம்பியில்லா இணையதளக் கருவிகள் உள்ளன. இவை விலங்குகளின் அசைவுகளை அறிவியலாளர்கள் கண்காணிக்க அனுமதிக்கின்றன. [1][2]

பரவலாகப் பொருந்தும் கண்காணிப்புக் கருவியைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் அதை மற்ற அமைப்புகளிலிருந்து வேறுபடுத்துகிறார்கள். ஏனெனில் இது இலகுவானது, குறைந்த சக்தியே தேவைப்படுகிறது, மேலும் இதன் மூலம் குகைகள் அல்லது வெற்று மரங்களுக்குள் கூட விலங்குகளைக் கண்காணிக்க முடியும். [3] இக்கருவி ஒரு முப்பரிமான அச்சுப்பொறியில் உருவாக்கப்படலாம். மேலும் இது மிகவும் இலேசானது. சிறிய வௌவால்கள் பறக்கும்போது கூட அவற்றின் வேகத்தை இது குறைக்காது.

சுமார் பதினான்கு நாட்களுக்குப் பிறகு விலங்குகளின் முதுகில் இருந்து பரவலாகப் பொருந்தும் கண்காணிப்புக் கருவி விழுகிறது. விஞ்ஞானிகள் பின்னர் உதிரிபாகங்களை மீண்டும் பயன்படுத்த விழுந்த பரவலாகப் பொருந்தும் கண்காணிப்புக் கருவியை சேகரிக்கின்றனர்.

காட்டேரி வெளவால்கள் மனிதர்களால் வைக்கப்படும் போது அவை சமூக பிணைப்புகளை உருவாக்குகின்றன என்பதைக் காட்ட விஞ்ஞானிகள் பரவலாகப் பொருந்தும் கண்காணிப்புக் கருவியைப் பயன்படுத்தினர், அவை கருவி விடுவிக்கப்பட்ட பிறகும் நினைவில் கொள்கின்றன. [1]

பெயர்[தொகு]

அறிவியலாளர்கள் இந்த கருவிக்கு "பரவலாக பொருந்தக்கூடிய கண்காணிப்புக் கருவி என்று பெயரிட்டனர், ஏனெனில் பரந்த அளவிலான விலங்குகளிலும் இதை பயன்படுத்த முடியும். வெளவால்கள், கொறித்துண்ணிகள், நிலநீர் வாழ்விகள் மற்றும் ஊர்வன. என்பன சில உதாரணங்களாகும். [1] ஏப்ரல் 2020 நிலவரப்படி, இக்கருவி வௌவால்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது.

கண்டுபிடிப்பு[தொகு]

பரவலாகப் பொருந்தும் கண்காணிப்புக் கருவியைக் கண்டுபிடித்த குழுவில் பெர்லினில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் மற்றும் செருமனியில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் ஓகையோ மாநில பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இடம்பெற்றுள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]