பரதாரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரதாரியா (Paratharia) அகிர் என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் கச்சு மாவட்டத்தில் வசிக்கும் அகிர் சாதியின் கோத்ராவாகும்.

தோற்றம்[தொகு]

பரதாரியா அகிர் என்பது யதுவன்ஷி அகிரின் ஒரு கிளை ஆகும். இந்த சமூகத்தின் தாயகமான பரதர் பகுதியிலிருந்து இதன் பெயரைப் பெற்றதாக நம்பப்படுகிறது. இவர்களின் மரபுகளின்படி, இவர்கள் கிருட்டிணனுடன் மதுராவிலிருந்து சௌராட்டிராவின் பரதர் பகுதிக்குக் குடிபெயர்ந்தனர். இதன் பின்னர் பராத்தரியா நானூறு முதல் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு கச்சு நகருக்குக் குடிபெயர்ந்தனர். இவர்கள் இப்போது கச்சு மாவட்டத்தில் எண்பத்து நான்கு கிராமங்களில் பரவிக்காணப்படுகின்றனர். இவற்றில் முப்பத்து நான்கு புஜ் வட்டத்திலும், இருபத்தி நான்கு அஞ்சார் வட்டத்திலும் மற்றும் நகத்ரானாவில் உள்ள பன்னிரண்டு கிராமங்களிலும் உள்ளனர். ஒரு சிலர் சௌராட்டிராவிலும் காணப்படுகின்றனர். பரதாரியா அகிர் ஒரு தனித்துவமான பேச்சுவழக்கினை (மொழி) கொண்டுள்ளனர். இது இந்தி மற்றும் குசராத்தி போன்றது. இந்த மொழி பரதாரியா அகிருக்குக் குறிப்பிடப்பட்டதாக உள்ளது. குசராத்தியில் மச்சோயா, போரிச்சா அகிர், சோராதியா அகொர் நகேரா அகிர் போன்ற பிற அகிர்கள் குசராத்தி மொழியினைப் பேசுகின்றனர்.[1]

தற்போதைய சூழ்நிலை[தொகு]

பராத்தாரியா சமூகம் பல குலங்களைக் கொண்டுள்ளது. இவற்றில் முக்கியமானவை தங்கர், பாலா, பட்டா, ஜாதியா, கெராசியா, சாட், சாங்கா, ககல், தீலா, மாதா மற்றும் வர்சந்த் ஆகும். இந்த குலங்கள் ஒவ்வொன்றும் சம தகுதியினை உடையது. தங்களுக்குள் கலப்பு திருமணம் செய்து கொள்கின்றனர். அண்டையிலுள்ள இந்து சமூகங்களைப் போலவே, இச்சமூகமும் குலத் திருமணத்தை நடைமுறைப்படுத்துகிறது. பராத்தாரியா என்பது சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளின் சமூகமாகும். பால் விற்பனை இச்சமூகத்தின் முக்கியமான குலத்தொழிலாகும். இவர்கள் சிறிய எண்ணிக்கையிலான சிறு வணிகர்களாக உள்ளனர்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரதாரியா&oldid=3500900" இலிருந்து மீள்விக்கப்பட்டது