பயிர் விளைச்சல் போட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்நாடு அரசு விவசாயிகளிடம் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் பொருட்டு பயிர் விளைச்சல் போட்டிகளை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்தப் போட்டி மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் என இரு நிலைகளில் நடத்தப்படுகிறது.

மாநில அளவிலான உற்பத்தித் திறன் போட்டி[தொகு]

மாநில அளவிலான உற்பத்தித் திறன் போட்டியில் கலந்து கொள்ளும் விவசாயிகளுக்கு நெல் மற்றும் மணிலா உற்பத்திக்காகத் தனி பரிசும், இதர பயிர் வகைகளுக்குத் தனி பரிசும் என இரு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

பரிசுகள்[தொகு]

மாநில அளவிலான உற்பத்தித் திறன் போட்டியில் இரு வகையான உற்பத்திகளுக்கும் இரண்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன. இதன் படி

முதல் பரிசு

  • நெல் மற்றும் மணிலா பயிர் உற்பத்தித் திறன் பரிசு - ரூ. 25,000/=
  • இதர பயிர் உற்பத்தித் திறன் பரிசு - ரூ. 8,000/=

இரண்டாம் பரிசு

  • நெல் மற்றும் மணிலா பயிர் உற்பத்தித் திறன் பரிசு - ரூ. 15,000/=
  • இதர பயிர் உற்பத்தித் திறன் பரிசு - ரூ. 4,000/=

மாவட்ட அளவிலான உற்பத்தித் திறன் போட்டி[தொகு]

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான உற்பத்தித் திறன் போட்டியில் கலந்து கொள்ளும் விவசாயிகளுக்கு நெல் மற்றும் மணிலா உற்பத்திக்காகத் தனி பரிசும், இதர பயிர் வகைகளுக்குத் தனி பரிசும் என இரு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

பரிசுகள்[தொகு]

மாவட்ட அளவிலான உற்பத்தித் திறன் போட்டியில் இரு வகையான உற்பத்திகளுக்கும் இரண்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன. இதன் படி

முதல் பரிசு

  • நெல் மற்றும் மணிலா பயிர் உற்பத்தித் திறன் பரிசு - ரூ. 8,000/=
  • இதர பயிர் உற்பத்தித் திறன் பரிசு - ரூ. 4,000/=

இரண்டாம் பரிசு

  • நெல் மற்றும் மணிலா பயிர் உற்பத்தித் திறன் பரிசு - ரூ. 4,000/=
  • இதர பயிர் உற்பத்தித் திறன் பரிசு - ரூ. 2,000/=

பங்கேற்பிற்கான தகுதிகள்[தொகு]

மாநில அளவிலான உற்பத்தித் திறன் போட்டியில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்ளலாம். மாவட்ட அளவிலான உற்பத்தித் திறன் போட்டியில் கலந்து கொள்வதற்கு அந்த மாவட்ட அளவிலான விவசாயிகள் கலந்து கொள்ளலாம்.

விண்ணப்பப் படிவம்[தொகு]

இந்தப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பப் படிவத்தையும், விளக்கத்தையும் அருகிலுள்ள உதவி வேளாண்மை அலுவலர் அல்லது வட்டார வேளாண்மை அலுவலர் ஆகியோர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.