பயனர் பேச்சு:Sundaram.suji

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Sundaram.suji, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 16:33, 26 சனவரி 2013 (UTC)[பதிலளி]

வணக்கம் சுந்தரம். விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் உருவாக்கும் இடமே. கலைக்களஞ்சியத்திற்கென்று ஒரு நடை உள்ளது. இங்கு வலைப்பதிவுகளில் எழுதுவது போன்றோ சான்றுகள் எதுவும் இல்லாமலோ நமது சொந்தக் கருத்துகளையோ எழுத முடியாது. பார்க்க விக்கிப்பீடியா: நடைக் கையேடு. மேலும் விக்கிப்பீடியா மாணவர்களும் பிறரும் பயன்படுத்தும் ஒரு கலைக்களஞ்சியம் எனவே அவர்களுக்கும் எளிதில் புரியும் வண்ணம் நமது கட்டுரைகள் இருப்பின் சிறப்பு. மேலும் விக்கியில் யார் வேண்டுமானாலும் கட்டுரையைத் தொடுக்கலாம். எனது கட்டுரையை யாரும் திருத்தலாகாது எனச் சொல்ல இயலாது.

விக்கியில் ஒரே தலைப்பில் பல கட்டுரைகள் இருந்தாலோ ஒரே பொருளை விளக்கும் வெவ்வேறு கட்டுரைகள் இருந்தாலோ அவற்றை பொருத்தமான தலைப்புடன் ஒன்றிணைப்பது வழக்கம். தங்களது ஐன்ஸ்டீனின் பொருண்மை - ஆற்றல் சமன்பாடு கட்டுரை ஏற்கனவே உள்ளது. காண்க: திணிவு-ஆற்றல் சமன்பாடு

யாரும் வேண்டுமென்றோ தங்களைப் புண்படுத்தும் நோக்கத்துடனோ கட்டுரையில் குற்றம் காணவில்லை. தனிப்பட்ட நோக்கம் எதுவும் இல்லை. அனைவருமே விக்கிக்கு-தமிழுக்கு சேவை செய்பவர்களே. இது வழக்கமாக நடைபெறும் துப்புரவுப்பணியே. எனது முதல் கட்டுரையே கலைக்களஞ்சிய நடையில் இல்லாததால் நீக்கப்பட்டது. ஆனால் நான் பிறகு மெல்ல மெல்ல விக்கிப்பீடியாவைப் புரிந்து கொண்டேன். இன்று ஒரு அதிகாரி( இது ஒன்றும் பெரிய பதவியோ பட்டமோ அல்ல. ஒரு சில பராமரிப்புப் பணிகளைச் செய்வதற்கு உதவியாக) நம்முடையது தமிழுக்கான ஒரு அர்ப்பணிப்பு மட்டுமே. எனவே இதனைக் கருத்தில் கொண்டு எவ்விதமான மன்க்கிலேசமும் கொள்ளாமல் தங்கள் பங்களிப்பினைத் தொடருங்கள். அக்கட்டுரை தானாகவே செம்மை பெறும். தங்களிடமிருந்து நல்ல பல கட்டுரைகளை எதிர்பார்க்கிறேன். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 12:44, 10 ஏப்ரல் 2013 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Sundaram.suji&oldid=1399083" இலிருந்து மீள்விக்கப்பட்டது