பயனர் பேச்சு:Mayooranathan/தமிழ் விக்கியூடகங்கள்: முன்னோக்கிய நகர்வுக்கான சில எண்ணங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்கிமீடியாவின் உள்ளாற்றலைச் சுட்டிக்காட்டியுள்ளது சிந்தனையைத் தூண்டும் நோக்கும். சில வேளைகளில், ஆங்கில விக்கிமீடியாவில் உள்ள பிரச்சினைகள், விக்கிமீடியாவுக்குத் தொடர்பே இல்லாத விக்கிலீக்சு தொடர்பான பிரச்சினைகளை முன்னிட்டுத் தமிழ் விக்கிப்பீடியாவையும் தள்ளி நின்று பார்க்கும் பிரச்சினையும் உள்ளது. எனினும், இங்கு வளர்முகமான சிந்தனைகளே தொகுக்கப்பட்டுள்ளதால் இதைப் பற்றிக் குறிப்பிடத் தேவை இல்லை.--இரவி (பேச்சு) 09:23, 13 செப்டம்பர் 2013 (UTC)

இரவி, கருத்துக்களுக்கு நன்றி. நீங்கள் கூறிய விடயங்கள் தமிழ் விக்கிப்பீடியா தொடர்பில் மக்கள் தயக்கம் காட்டுவதற்கான காரணங்களுள் அடங்குவனவே. தமிழில் அறிவுப் பரவலுக்கான சில உள்ளார்ந்த அடிப்படைப் பிரச்சினைகள் குறித்தும், அவற்றை எதிர் கொள்வதில் விக்கியூடகங்கள் வழங்கும் வாய்ப்புக்கள், அவற்றைப் பயன்படுத்திக் கொள்வதற்கான வழிமுறைகள் என்பவை பற்றியுமே கட்டுரையில் எடுத்தாள எண்ணினேன். இது தொடர்பாகக் இக்கட்டுரையில் குறிப்பிட்டிருப்பவை கூட எனது சில எண்ணங்கள் மட்டுமே. வரும் ஆண்டுகளில் இவ்விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடுவதற்கு இது உதவியாக அமையக்கூடும் என எண்ணுகிறேன். ---மயூரநாதன் (பேச்சு) 09:51, 13 செப்டம்பர் 2013 (UTC)

சில கருத்துக்கள்[தொகு]

அருமையான கட்டுரை. சில கருத்துக்கள்:

  • "உயர் அறிவுத்துறைகளில் தமிழ் மொழிமூல உள்ளடக்கங்களுக்கான தேவைக் குறைவு" - எனது எண்ணம் என்னவென்றால் தேவை இருக்கின்றது, ஆனால் தமிழைப் பயன்படுத்தக் கூடியதற்கான சூழல் அல்லது சந்தை இல்லை. வேளாண்மை, கணினி போன்ற துறைகளில் தமிழ்ப் பயன்பாடு வேதியியல், இயற்பியல் போன்ற துறைகளை விட சிறப்பாக உள்ளது. மருந்துவம் சட்டம் போன்றவை தமிழில் இருக்க வேண்டியதற்கான அவசியம் உடனையாக உண்டு. ஆனால் இவற்றின் உயர் நிலைகளில் தமிழ் இல்லை. துறை/தன்னார்வலர்கள் + கல்விமுறை + அரசு + நுகர்வோர் கூடிவரும் போதுதான் தமிழில் துறைசார் உள்ளடக்கங்களுக்கான வளர்ச்சி சாத்தியம். வேளாண்மை, கணினி ஆகிய இரண்டுக்கும் கல்விமுறை + அரசு காட்டிலும் துறை + நுகர்வோரே அத் துறைகளில் தமிழைச் சாத்தியப்படுத்துகின்றனர். மருத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் நுகர்வோர் + துறை உண்டு, ஆனால் அரசும் கல்விமுறையும் ஒத்துளைக்கவில்லை. இயற்பியல், வேளாண்மை போன்றவற்றில் எதுவுமே குறிப்பிடத்தக்க அளவு அமையவில்லை.
  • தமிழ் விக்கியூடகங்களில் பின்வருபவை சாத்தியம் ஆகின்றன:
  • நாம் மையநீரோட்ட அல்லது popular பண்பாட்டில் உள்ளவற்றை மட்டும் இல்லாமல், niche துறைகளிலும் உள்ளடக்கங்களை விரிவாக்க கூடியதற்கான வாய்ப்பையே. எ.கா காமிக்சு, தமிழ் ராப்.
  • வரலாற்றைப் பதிவு செய்யதல்: எ.கா பகுப்பு:2013 தமிழர்
  • மொழி பயன்படத் தொடங்கும் போதுத்தான் கலைச்சொற்களின், நடையின் குறை நிறைகள் தெரியும்.
  • முன் இருக்கும் சவால்களில் சில/வலையமைப்பு உருவாக்கம்
  • உயர் அறிவியல் தொழில்நுட்ப துறைகளில் உள்ளடக்க உருவாக்கத்தில் துறைசார்ந்தவர்களை எவ்வாறு இன்னும் விரிவாக ஈர்க்கலாம், ஈடுபடுத்தலாம் என்பது.
  • கலைச்சொல்லாக்கத்தில், மொழி நடை தொடர்பாக அத் துறைகள் சார்ந்தவர்களை எவ்வாறு ஈர்க்கலாம், ஈடுபடுத்தலாம்.
  • ஒரு பெரும் மொழிபெயர்ப்பு இயக்கத்துக்கான தேவையும் வாய்ப்பும் இருக்கிறது. மொழிபெயர்ப்பைத் துறையைப் பலப்படுத்தல், விரிவாக்கல், ஈடுபடுத்தல்.

சில எண்ணங்கள். கட்டுரை பூரணமாக உள்ளது. மிக்க நன்றிகள். --Natkeeran (பேச்சு) 22:49, 14 செப்டம்பர் 2013 (UTC)


நற்கீரன், உங்கள் விரிவான கருத்துக்களுக்கு நன்றி. நான் "தேவைக் குறைவு" என்று குறிப்பிட்டிருப்பது "Lack of (Market) Demand" என்பதைத்தான். ஆனால், நீங்கள் குறிப்பிட்டிருப்பதுபோல் "Need" நிச்சயமாக உண்டு.
//மொழி பயன்படத் தொடங்கும் போதுதான் கலைச்சொற்களின், நடையின் குறை நிறைகள் தெரியும்// என்று சரியாகச் சுட்டிக் காட்டியுள்ளீர்கள். தற்போதைய தமிழர் சமூகச் சூழலில், தமிழ் மொழி மூலமான உயர் அறிவுத்துறைகளுக்கான "சந்தைக் கேள்வி" குறைவாக இருப்பது ஒரு பிரச்சினை. ஆனாலும், விக்கியூடகங்கள் "சந்தைக் கேள்வி" என்னும் தடையை இலகுவாகக் கடக்க முடியும் என்பதுடன், ஒரு வகையான "கேள்வி"யையும் உருவாக்க வல்லவை. இதனால், உயர் அறிவுத்துறைகளில் தமிழ் மொழிப் பயன்பாட்டை ஓரளவு கூட்டக்கூடிய வாய்ப்புக்கள் உண்டு.
"துறை/தன்னார்வலர்கள் + கல்விமுறை + அரசு + நுகர்வோர்" என்னும் சூத்திரத்தில், மாற்றுவதற்குக் கடினமான கல்விமுறை. அரசு என்பவற்றின் எதிர்மறையான தாக்கத்தை ஓரளவு ஈடு செய்வதற்கு விக்கியூடகங்கள் உதவக்கூடும் என்றே நான் கருதுகிறேன். ---மயூரநாதன் (பேச்சு) 17:25, 15 செப்டம்பர் 2013 (UTC)